அப்போலோ மருத்துவமனையில் சமந்தா.! அதிர்ச்சியாகும் ரசிகர்கள்…

0
samantha
samantha

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சமந்தா அதன் பிறகு தொடர்ந்து தென்னிந்திய சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். விஜய், விஜய் சேதுபதி போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடியாகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் தமிழ் சினிமாவில் நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கும் காலத்தில் நடிகர் நாக சைத்தான்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆகி நான்கு ஆண்டுகள் ஆன நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவரத்தை பெற்று பிரிந்து விட்டனர்.

விவாகரத்தை பெற்ற பின்னர் நடிகை சமந்தா உச்சகட்ட கவர்ச்சியை காட்ட ஆரம்பித்தார் அதுமட்டுமல்லாமல் சுதந்திர பறவையாகவும் மாறினார் இதை அடுத்து பாலிவுட்டில் நடிகை சமந்தா யசோதா, சகுந்தலம், குஷி, ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இதற்கு இடைப்பட்ட காலத்தில் நடிகை சமந்தாவிற்கு மயோசிடீஸ் என்ற கொடிய நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து பதிவை செய்திருந்தார். இதற்கு பல  ரசிகர்கள் சோகத்தை கமெண்ட் பக்கத்தில் தெரிவித்து இருந்தனர்.

அதன் பிறகு சமந்தா நடிப்பில் உருவான யசோதா திரைப்படம் திரையரங்கில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று இருக்கிறது இந்த நிலையில் மீண்டும் சமந்தாவின் உடல்நிலை மிக மோசமானதால் ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெலுங்கு ஊடகங்களில் செய்தியாக பரவி வருகிறது.

சமந்தா அண்மையில் ஒரு பேட்டியில் கஷ்டத்தில் இருந்து மீண்டும் வருவதாகவும் கூறியிருந்தார். இந்த நேரத்தில் நடிகை சமந்தா மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ரசிகர்களுக்கு இடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மருத்துவமனையில் இருந்து குணமடைந்து தான் வெளியே வந்திருக்கிறார் என்று நினைத்த ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சி தற்போது உருவாகி இருக்கிறது.