நடிகர் அஜித் திரைப்படத்தின் ரீமேக்கில் நடிக்க இருக்கும் சல்மான் கான்.! அவருக்கு ஜோடியாக விஜய் பட நடிகை.

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகர்களாக வலம் வந்து கொண்டிருக்கும் அஜித் மற்றும் விஜய் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்து வருகிறார். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருந்து வருவதால் இவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் பெற்று வருகிறது.

இவர் நடிப்பில் தொடர்ந்து திரைப்படங்கள் வெளிவரும் நிலையில் தற்போது அஜித் நடித்த திரைப்படத்தை சல்மான் கான் ரீமேக்கில் நடிக்க  முடிவெடுத்துள்ளார்.  எனவே இத்திரைப்படத்தில் விஜய் திரைப்பட நடிகை ஒருவர் கமிட்டாகி இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

அதாவது அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான வீரம் திரைப்படம் ஹிந்தியில் ரீமேக்காக உள்ளது.  வீரம் திரைப்படம் 2014ஆம் ஆண்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் தமிழ் திரைவுலகில் வெளியானது இத்திரைப்படம் பிரம்மாண்டமான வெற்றியைப் நிலையில் அஜித்தின் மார்க்கெட்டும் அதிகமானது.

தெலுங்கில் காட்டமராயுடு என்ற பெயரில் ரீமேக்கானது இத்திரைப்படத்தில் பிரபல நடிகர் பவன் கல்யாண் நடித்து இருந்தார் எனவே தற்போது ஹிந்தியில் இத்திரைப்படம் ரீமேக் செய்ய உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.  ஹிந்தியில் இத்திரைப்படத்தினை பர்ஹாத் இயக்கத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிக்கவுள்ளார்.

இத்திரைப்படத்திற்கு கபி ஈத் கபி தீவாளி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்த வருடம் கடைசியில் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இத்திரைப்படத்தில் கதாநாயகியாக தளபதி விஜயின் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்த பூஜா ஹெக்டே சல்மான்கானுடன் ஜோடி  சேர்ந்துள்ளார் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

Leave a Comment