பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதன் மூலம் 150 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் சல்மான்கான்.? படத்துல நடிச்சப்ப கூட இவ்வளவு காசு பாக்கலையாம்.

விஜய் டிவி தொலைக்காட்சி ஆண்டுதோறும் வித்தியாசமான நிகழ்ச்சிகளை கொடுத்து மக்களின் கவனத்தை திசைத் திருப்பவதோடு மட்டுமல்லாமல் TRP- யிலும் நல்லதொரு இடத்தைப் பிடிக்கிறது. அவ்வகையில் விஜய் தொலைக்காட்சி பல நிகழ்ச்சிகளை கொடுக்கிறது அதில் முதலாவதாக இன்றும் சிறந்ததாக ஓடிக்கொண்டு மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது தான் பிக்பாஸ் நிகழ்ச்சி.

பிக் பாஸ் நான்கு சீசன்கள் சிறப்பாக முடிவுற்ற நிலையில் ஐந்தாவது சீசன் தற்போது வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது. அதற்கான ப்ரோமோ மற்றும் லோகோ ஆகியவை இணையதள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது. நான்கு சீசன்களை உலகநாயகன் கமலஹாசன் சிறப்பாக தொகுத்து வழங்கினார்.

இந்த நிலையில் 5வது கட்ட சீசனையும் கமல்ஹாசனே சீரும் சிறப்புமாக நடத்தி ரெடியாக இருக்கிறார். இதற்காக உலகநாயகன் கமலஹாசன்னுக்கு  பல கோடி சம்பளம் வாங்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி பல மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது.  அதை பல நட்சித்திர பிரபலங்கள் தொகுத்து வழங்குகின்றனர்.

அந்த வகையில் இந்தியில் 14 சீசன்களை சல்மான்கான் தொகுத்து வழங்கிய நிலையில் 15வது சீசனையும் அவர் தொகுத்து வழங்க இருக்கிறார். இதற்காக அவர் மிகப்பெரிய ஒரு தொகையை வழங்கி இருக்கிறார் கடைசியாக இவர் ஒளிபரப்பு செய்த 14வது சீசனுக்காக சல்மான் கான் ஒரு வாரத்திற்கு 20 கோடி சம்பளம் வாங்கினார்.

தற்போது சல்மான்கான் 15வது சீசனுக்காக அவர் ஒரு வாரத்திற்கு 25 கோடி சம்பளம் வாங்க ரெடியாக இருக்கிறார்.  அப்படிப் பார்த்தால் 15 வது சீசனில் சல்மான்கான் வாங்கும் சம்பளம் கிட்டத்தட்ட 350 கோடி வரை இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

Leave a Comment