LGM movie: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வரும் நடிகர் ஹரிஷ் கல்யாண் தொடர்ந்து ரொமான்டிக் காதல் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் இவருடன் நடிப்பில் வெளியான இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், பியார் பிரேமா காதல் போன்ற படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருந்தது.
இதனை தொடர்ந்து தற்பொழுது இவர் எல்ஜிஎம் திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். மேலும் எல்ஜிஎம், 100 கோடி வானவில், டீசல், லப்பர் பந்து போன்ற நான்கு திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இவ்வாறு கடந்த 28ஆம் தேதி எல்ஜிஎம் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீசானது.
இந்த படத்தினை இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இயக்க ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக இளம் நடிகை இவனா நடித்துள்ளார். மேலும் இவர்களைத் தொடர்ந்து நதியா, யோகி பாபு, ஆர்.ஜே விஜய் உள்ளிட்ட பலரும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். எல்ஜிஎம் படத்தை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘தோனி எண்டர்டெயின்மெண்ட்’ மூலம் தயாரித்திருந்தார் இதுவே தோனி நிறுவனத்தின் முதல் திரைப்படம் ஆகும்.
எனவே ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பு இந்த படத்தின் ரிலீஸ்சாக காத்து வந்தனர். இவ்வாறு தற்பொழுது இந்த படத்தில் இவானா நடிப்பதற்காக எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. நடிகை இவானா இதற்கு முன்பு லவ் டுடே திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.
மலையாளத்தைச் சேர்ந்த இவர் சில திரைப்படங்களை நடித்திருந்தாலும் லவ் டுடே திரைப்படம் தான் மிகப்பெரிய ரீசனை பெற்று தந்தது. இதனை அடுத்து தற்பொழுது எல்ஜிஎம் படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து நடிப்பதற்காக நடிகை இவானா ருபாய் 32 லட்சம் சம்பளம் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.