படும் தோல்வியினை சந்தித்த ‘புலி’ படத்திற்காக நடிகர் விஜய் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

0
PULI
PULI

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் சமீப காலங்களாக வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை பெற்று வருகிறது. மேலும் இந்த படங்கள் கலவை விமர்சனத்தை பெற்றாலும் கூட வசூல் ரீதியாக பாக்ஸ் ஆபிஸில் ஹிட்டடித்து வரும் நிலையில் விஜய் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்து தோல்வி அடைந்த படங்கள் இருக்கிறது.

அந்த வகையில் சிம்பு தேவன் இயக்கத்தில் முதன்முறையாக விஜய் நடிப்பில் வெளிவந்த படம் தான் புலி இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்திருந்த நிலையில் மேலும் ஹன்சிகா, ஸ்ரீதேவி, தம்பி ராமையா, பிரபு, சுதீப் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்திருந்தனர்.

மிகப்பெரிய எதிர்பார்ப்பு மத்தியில் வெளிவந்த இந்த படம் படும் தோல்வியினை பெற்றது. சுறா படத்திற்கு பிறகு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பிற்கு பிறகு இடையே வெளிவந்து கடைசியில் தோல்வி அடைந்த படம் புலி தான். விஜய்யின் சினிமா கிரியேரில் மிக மோசமான படங்களில் புலி படமும் சேர்ந்தது.

இந்நிலையில் இந்த படம் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய தோல்வியினை சந்தித்த நிலையில் இந்த படத்திற்காக விஜய் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நடிகர் விஜய் ரூ.20 கோடி புலி படத்தில் நடிப்பதற்காக சம்பளம் வாங்கினார் என கூறப்படுகிறது.

இவ்வாறு சமீப காலங்களாக விஜய் நடிப்பில் வெளிவரும் அனைத்து படங்களும் அடுத்தடுத்து மிகப்பெரிய வெற்றியினை பெற்று வருகிறது. அந்த வகையில் கடைசியாக இவருடைய நடிப்பில் வெளியான வாரிசு படம் கலவை விமர்சனத்தை பெற்றாலும் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியது. இதனை அடுத்து தற்பொழுது விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.