ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் நடித்த சிறுவன் இப்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா.! அதிரவைக்கும் தகவல்.!

புதுமுக நடிகர்கள் மற்றும் நடிகைகளை வைத்து கடந்த 2008ம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் ஸ்லம்டாக் மில்லியனர். இந்த திரைப்படம் பல சினிமா ரசிகர்களை கவர்ந்து பல விருதுகளையும் வென்றது.அதேபோல் இந்த திரைப்படம் வெறும் 15 கோடியில் எடுக்கப்பட்டது ஆனால் உலகம் முழுவதும் 377 கோடி வரை வசூல் சாதனை படைத்தது.

இந்த திரைப்படத்தில் சிறு குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் அசாருதீன் முகமது இஸ்மாயில். இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பல விருதுகளையும் வென்றார். இவர் உண்மையில் சேரியில் பிறந்து வாழ்ந்தவர் தான்.அதனால் இந்த திரைப்படத்தில் எதார்த்தமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார் படத்தில் நடிப்பதற்கு முன் இவருக்கு சொந்த வீடு கூட இல்லை.

இவரது வீடு சேரியின் பத்துக்கு பத்து தகரக் கொட்டகை தான்.இதனை அறிந்த இயக்குனர் படம் வெளியான கையோடு அவருக்கு 45 லட்சம் மதிப்பில் ஒரு வீடு ஒன்றை வாங்கிக் கொடுத்தார் ஆனால் அவரின் நேரம் காலமோ என்னோவோ தெரியவில்லை மீண்டும் பத்துக்கு பத்து தகரக் கொட்டகைக்குள் வந்து விட்டார்.

ஸ்லம்டாக்  மில்லியனர் படத்திற்கு பிறகு பெரிய வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. அதனால் கிடைத்த வேலையை செய்து வந்துள்ளார் ஆசார். ஒரு காலகட்டத்தில் குடி மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமை ஆக்கினார்.அதுமட்டுமில்லாமல் குடும்பத்தின் கடன் சுமையை அதிகரித்ததால் தனக்கு பரிசாக கிடைத்த வீட்டை 45 லட்சம் மதிப்புள்ள வீட்டை விற்று தற்போது மீண்டும் சேரிக்கே வந்துவிட்டார்.

நல்ல வாழ்க்கை கிடைத்தும் போதை பழக்கத்திற்கு அடிமையாகிய இவரை மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே வந்து கொண்டு வந்து விட்டது. போதைப்பழக்கத்திற்கு பலர் அடிமையானது நாம் பார்த்துவிட்டோம் அந்த லிஸ்டில் தற்போது இவரையும் இணைத்துக் கொண்டார் இவரின் இந்த நிலைமைக்கு போதை பழக்கம் மட்டுமே காரணம்.

போதை பழக்கம் அனுபவிக்கும் போது மகிழ்ச்சியாக இருந்தாலும்.பின்பு ஒரு காலகட்டத்தில் இதற்கு ஏன் அடிமையானோம் என ஒவ்வொரு நாளும் நம்மளை திட்டிக் கொள்ளும் அளவிற்கு வந்து விடுவோம். உங்களுக்கும் போதை பழக்கம் இருந்தால் விட்டு விடுங்கள்.

Leave a Comment