உடம்பு முழுக்க ரத்தம்.. கையில் கத்தியுடன் வேட்டையாட துடிக்கும் பிரபாஸ்.. சலார் படத்திலிருந்து வெளியே வந்த போஸ்டர்

Salaar Movie poster: பிரம்மாண்ட பட்ஜெட்டில் வெளிவரும் படங்கள் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி மிகப்பெரிய வெற்றி பெறுகின்றன. அந்த வகையில் ராஜமௌலி, ஷங்கரை தொடர்ந்து பிரம்மாண்ட பட்ஜெட்டில் படங்களை எடுத்து வருபவர் பிரசாந்த் நீல்.

இவர் ஆரம்பத்தில் சின்ன சின்ன படங்களை எடுத்து வந்தாலும் கடந்த இரண்டு மூன்று படங்களாக பெரிய பட்ஜெட்டில் எடுத்து வருகிறார். அப்படி இவர் கன்னட நடிகர் யாஷை வைத்து எடுத்த கே ஜி எஃப் தங்க சுரங்கத்தில் நடக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து படத்தை எடுத்திருந்தார் படம் முழுக்க முழுக்க ஆக்சன், எமோஷனல் படமாக இருந்ததால் மக்கள் மத்தியில் படும் சென்றடைந்தது.

அதனால் படம் அதிக நாட்கள் ஓடியதோடு மட்டுமல்லாமல் 500 கோடிக்கு மேல் அள்ளியது அடுத்த சில மாதங்களிலேயே கே ஜி எஃப் 2 பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவானது முதல் பாகத்தை விட சிறப்பாக இருந்ததால் உலக அளவில் 1000 கோடிக்கு மேல் வசூல் அள்ளி புதிய சாதனை படைத்தது.

கேஜிஎப் பார்ட் 1, பார்ட் 2 வெற்றி பெற்றதை தொடர்ந்து கே ஜி எஃப் 3 ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்நோக்கி இருக்கின்றனர் ஆனால் அதற்கு முன்பாக பிரசாந்து நில் பிரபாஸுடன் கூட்டணி அமைத்து சலார் படத்தை உருவாக்கி வருகிறார் அடுத்த வருடம் ஆரம்பத்தில் படம் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது.

இந்த படத்தில் இருந்து இதுவரை பெரியளவு அப்டேட் வரவில்லை ஆனால் கடைசியாக ஒரு சின்ன வீடியோ ஒன்றை வெளிவந்தது அதனைத் தொடர்ந்து சலார் படத்திலிருந்து பஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு ரிலீஸ் செய்துள்ளது அதில் பிரபாஸ் ரத்தம் சொட்ட சொட்ட கையில் கத்தியுடன் படும் மாஸாக இருக்கிறார் இதோ அந்த போஸ்டரை நீங்களே பாருங்கள்..

Salaar Movie
Salaar Movie