பட வாய்ப்பு இல்லை என்றாலும் பந்தாவாக விலை உயர்ந்த காரை வாங்கி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால்.! என்ன கார் என்று பார்த்தீர்களா

இந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் நடிகை சாக்ஷி அகர்வால் இவர் மாடல் அழகியாக தான் சினிமாவில் தனது பயணத்தை தொடர்ந்தார் சினிமாவில் நுழைவதற்கு முன்பு இவர் பன்னாட்டு நிறுவனத்தில் வணிக ஆலோசகராக பணியாற்றி வந்தார். நடிப்பதை தாண்டி சாக்ஷி அகர்வால் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முதன் முதலாக 2013ஆம் ஆண்டு ராஜாராணி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இந்த திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றி மறைந்தாலும் ரசிகர்களிடையே பெயரையும் புகழையும் பெற்றார் இதனைத் தொடர்ந்து யோகன், அதியன், காலா, விஸ்வாசம், சின்ரெல்லா அரண்மனை 3  ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார்.

அதுமட்டுமில்லாமல் விஜய் தொலைக்காட்சியில் 2019ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்டு வந்த பிக்பாஸ் மூன்றாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார். தற்போது சாக்ஷி அகர்வால் கன்னடம், மலையாளம், தமிழ் என பல மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் ஹாலிவுட்டில் கூட 120hrs என்ற படத்தில் கூட நடித்திருந்தார்.

சாக்ஷி அகர்வால் போட்டோ ஷூட் எடுப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர் இவர் அடிக்கடி சமூகவலைதளத்தில் போட்டோ ஷூட் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு வந்தார் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் பெற்று வந்தது இந்த நிலையில் தற்பொழுது சாக்ஷி அகர்வால் புதிய காரை வாங்கியுள்ளார்.

அதனை ரசிகர்களுக்கு அறிவிக்கும் வகையில் புதிய கார் உடன் செம ஸ்டைலாக போஸ் கொடுத்து சில புகைப்படங்களை எடுத்துள்ளார் அந்த புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்டு ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் பெற்று வருகிறார்.

sakshi agarwal
sakshi agarwal

Leave a Comment