சில்க் ஸ்மிதாவாக மாறிய சாக்ஷி அகர்வால்.! குட்டையான டிரௌசரில் ஜிகுஜிகுன்னு ஒரு போஸ்.!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வருபவர் நடிகை சாக்ஷி அகர்வால் தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம் மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு மாடலிங் செய்து வந்தவர்.

2013ஆம் ஆண்டு அட்லி இயக்கத்தில் வெளியாகிய ராஜா ராணி திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகில் நுழைந்தார் அதன்பிறகு யோகன், திருட்டு விசிடி, கககபோ, காலா, விஸ்வாசம்,  டெடி ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார்.

sakshi agarwal
sakshi agarwal

ஆனால் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் எதிலும் இவருக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. அதன்பிறகு விஜய் தொலைக்காட்சி நடத்திய பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு பல திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

தற்பொழுது சாக்ஷி அகர்வால் கையில் சின்ரெல்லா, ஆயிரம் ஜென்மங்கள், அரண்மனை 3, பக்கிரா, தி நைட், புறவி, 120 ஹவர்ஸ். என பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப் படங்களை வெளியிடுவது வழக்கம்.

எப்படியாவது முன்னணி நடிகையாக மாற வேண்டும் என சமூகவலைதளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை சிதற விட்டு வருகிறார் அதிலும் இவர் அடிக்கடி உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருப்பதை  காட்டும் விதமாக ஜிம் ஒர்க் அவுட் வீடியோ மற்றும் புகைப்படத்தையும் வெளியிடுவார்.

அந்த வகையில் தற்போது மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா போல் குட்டையான டிரவுசர் அணிந்து கொண்டு ஜிங்கு ஜிங்குன்னு போஸ் கொடுத்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் அச்சு அசல் சில்க்ஸ்மிதாவாகவே மாறி விட்டீர்கள் என  கமெண்ட் செய்து வருகிறார்கள்.

sakshi agarwal
sakshi agarwal

Leave a Comment