“கயல்” சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக சைத்ரா ரெட்டி – வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் வந்த சில மாதங்களிலேயே மக்களிடையே அமோக வரவேற்பைப் பெற்று சிறப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த கயல் சீரியல் தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களிலே நம்பர் ஒன் சீரியலாக வலம் வருகிறது. மேலும் டிஆர்பிலும் தொடர்ந்து முன்னிலையில் வகிக்கும் ஒரு சீரியல் ஆகும்.

இந்த தொடரில் ஹீரோயினாக கயல் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சைத்ரா ரெட்டி மக்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரிதும் பிரபலம் அடைந்தவர். இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி என்ற சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து பெரிதும் புகழ்பெற்றவர்.

பின்பு தற்போது கயல் சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சீரியலில் ஹீரோவாக நடித்துவரும் சஞ்சீவ் இவரும்  விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீசன் 1 தொடரில் ஹீரோவாக நடித்து வந்து பிரபலமடைந்தவர் மேலும் இந்த சீரியலில் அவருடன் நடித்து வந்த ஆலியா மானசா என்ற நடிகையை காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்கள் இருவருக்கும் ஒரு அழகிய மகள் உள்ள நிலையில் மீண்டும் இவரது மனைவி தற்போது நிறைமாத கர்ப்பமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இப்படி மற்ற இரு சீரியல்கள் மூலம் நடிகர் நடிகைகளாக நடித்து தனக்கான ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள சஞ்சீவ் மற்றும் சைத்ரா ரெட்டி நடித்து வரும் இந்த கயல் சீரியல் மக்கள் பலராலும் ரசிக்கப்பட்ட பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த கயல் சீரியலில் நடித்து வரும் பிரபலங்களின் ஒருநாள் சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. சைத்ரா ரெட்டி ரூ 25 ஆயிரம், சஞ்சீவ் ரூ 20 ஆயிரம், கோபி ரூ 10 ஆயிரம், ஐஸ்வர்யா ரூ 8 ஆயிரம், முத்துராமன் ரூ 15,000.

Leave a Comment