நடிகை சாய் பல்லவி மலையாளத்தில் பிரேமம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஈர்த்தவர், இவர் அதனை தொடர்ந்து தமிழிலும் கால்தடம் பதித்தார் தமிழில் மாரி 2 மற்றும் என்ஜிகே திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை என்றாலும் சாய்பல்லவிக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன, இந்த நிலையில் சாய் பல்லவி நடித்து வரும் விரட்டப் பருவம் என்ற திரைப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்றது, இந்த படப்பிடிப்புக்காக பொது இடங்களில் ரகசிய கேமரா பயன்படுத்தப்பட்டு படமாக்கப்பட்டது.
சாதாரண உடை அணிந்து சாய்பல்லவி பேருந்து நிலையத்தில் அமர்ந்து இருந்தார் இதனை ரகசியமாக படம் பிடித்துள்ளார்கள் சாய்பல்லவி அமர்ந்திருந்ததை பொதுமக்கள் யாரும் அடையாளம் காண முடியவில்லை இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
@Sai_Pallavi92 spotted at d shoot in my village? #saipallavi #virataparvam pic.twitter.com/LlO0DDiY4W
— sravan edunoori (@SEdunoori) September 7, 2019