முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் இணைந்த சாய் பல்லவி.! அதிர்ஷ்டம் கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டும் என்று சொல்வார்களே அது இதுதானா.!

தமிழ் ரசிகர்கள் தமிழ் திரைப்படத்தை மட்டுமல்லாமல் பல மொழி திரைப்படத்தையும் ரசித்து பார்க்கிறார்கள். அந்த வகையில் பல திரைப்படங்களை ரசித்து பார்க்கும் ரசிகர்கள் மலையாளத் திரைப்படத்தை மட்டும் அதிகமாக ரசித்து பார்க்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் மலையாளத்தில் வெளியாகிய ப்ரேமம்  திரைப்படத்தை தமிழ் ரசிகர்கள் அதிகமாக ரசித்துப் பார்த்தார்கள், அந்த வகையில் இந்த வருடம் வெளியாகிய ஐயப்பனும் கோஷியும் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது.

இந்த திரைப்படத்தை மலையாள ரசிகர்கள் மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களும் அதிகமாக விரும்பி பார்த்தார்கள், இந்த திரைப்படத்தின் கதை இருவரை சுற்றியே நகரும்.

ஐயப்பனும் கோஷியும் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததால் இந்த  படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய முடிவு எடுத்துள்ளார்கள், மேலும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பவர்ஸ்டார் பவன்கல்யாண் நடிக்க இருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் நாயகியாக சாய்பல்லவி நடிக்க இருக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது.

ஏனென்றால் சாய் பல்லவியின் நடிப்பு சமீபகாலமாக அனைவராலும் ரசிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment