ஃசாப்ட் கேரக்டர் சாய் பல்லவியைதான் பார்த்திருபீங்க.! இப்படி டெரரா பார்த்துள்ளீர்களா.?

actress saipallavi: சாய்பல்லவி இவர் மலையாளத்தில் நிவின் பாலியுடன் இணைந்து பிரேமம் என்ற திரைப்படத்தில் நடித்து அதன் மூலம் பிரபலமானார். இந்த திரைப்படத்தில் மலர் டீச்சர் என்ற அவரது கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது.

மேலும் இதைதொடர்ந்து அவர் தமிழில் மாரி 2 என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இன்றளவும் பட்டி தொட்டி எங்கும் பேசப்பட்டு வருகிறார். இந்த மாரி 2 திரைபடம் தென்னிந்தியா அளவில் இன்னும் முதலிடத்தில் இருந்து வருகிறது என்பதை அனைவரும் அறிந்ததே.

இந்த படத்தில் வரும் ரவுடி பேபி என்கின்ற பாடல் உலகெங்கும் ஹிட்டாகி பல மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்தது.

இதைதொடர்ந்து இவர் தமிழ் மலையாளம் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தெலுங்குவில் விராட பர்வம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் சாய் பல்லவியின் கேரக்டர் லுக் போஸ்டர் ஓன்று வெளியானது.

இப்போது இந்த படத்தில் சாய் பல்லவி நக்சலைட் ஆக நடிக்கவுள்ளார். அதற்காக பட குழு ஏற்பாடு செய்த முன்னாள் நக்சலைட் ஒருவரிடம் பயிற்சி எடுத்துக்கொண்டு வருகிறார்.

Leave a Comment