12 வருடத்திற்கு முன்பே தமிழில் ஜெயம் ரவி படத்தில் நடித்துள்ள சாய் பல்லவி.! வைரலாகும் புகைப்படம்

சாய்பல்லவி என்றாலே அனைவருக்கும் பிடித்த ஒருவர் ரசித்த ஒருவர் ரசிகர்களின் தற்போதைய கனவுக்கன்னி எனவும் கூறலாம் அதிலும் இவருடைய பருக்கள் தான் இவருக்கு இன்னும் அழகை தருகின்றது என பலர் கூறியுள்ளனர். இவர் தமிழில் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்துள்ளார் இருப்பினும் இவர் மலையாளம், தெலுங்கு போன்ற மொழி படங்களில் நடித்து திரை உலகில் கலக்கி வருகிறார்.

2015ஆம் ஆண்டில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் மலையாளத்தில் திரையுலகிற்கு வெளிவந்த படம் பிரேமம் ஆகும். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது இவருக்கு திருப்புமுனையாக அமைந்த படம் இதுவாகும். இது  மட்டுமல்லாமல் அவருக்கு நடனக் கலையில் அதிக ஆர்வம் உள்ளதால் டான்ஸ் ப்ரோக்ராம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

2008ஆம் ஆண்டில் ஜெயம் ரவி நடிப்பில் திரையுலகிற்கு வெளிவந்த திரைப்படம் தாம்தூம் இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக கங்கனா ரணாவத் நடித்திருப்பார். இந்தப் படம் ஹாலிவுட்  ஸ்டைலில் மேக்கிங் செய்திருப்பதால் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக சாய்பல்லவி நடித்திருப்பார்.

இப்படம் திரையுலகிற்கு அறிமுகமாகி 12 வருடங்கள் கழித்து சாய்பல்லவி உள்ள ஒரு புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தற்பொழுது இவர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.இதோ அந்த புகைப்படம்.

sai-pallavi-dhaamdhoom
sai-pallavi-dhaamdhoom

Leave a Comment