வட சென்னையை பற்றி என்னா தெரியும்..? வெற்றிமாறன் மற்றும் ரஞ்சித்தை நீ இங்கதான் பொருந்தியா.? என பேட்டியில் கிழித்து தொங்கவிட்ட சாய் தீனா..!

0

sai deena latest speech vetrimaran and ranjith: சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் சாய் தீனா அவர்கள் பிரபல இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் ரஞ்சித் பற்றி பேசிய வீடியோ தொகுப்பானது சமூகவலைதளத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது. பொதுவாக ஹீரோ அளவிற்கு வில்லன் நடிகர்கள் பிரபலமாவதில்லை.

அந்த வகையில் கமல் நடிப்பில் வெளிவந்த விருமாண்டி என்னும் திரைப்படத்தின் மூலம் ஜெயில் வார்டனாக அறிமுகமாகி சினிமாவில் அறிமுகமானவர் தான் சாய் தீனா. இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக்காட்ட இதன் மூலமாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டார்.

அதுமட்டுமல்லாமல் இவர் நடித்த முதல் திரைப்படமே முன்னணி நடிகர் திரைப்படம் என்ற ஒரே காரணத்தினால் அடுத்த அடுத்த திரைப்பட வாய்ப்புகளை எளிதில் பெற ஆரம்பித்தார் அந்த வகையில் ஜில் ஜங் ஜக் மற்றும் தெறி, வட சென்னை போன்ற முக்கிய திரைப்படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.

திரைப் படங்களில் வில்லனாக அனைவருக்கும் காட்சி அளித்தாலும் உண்மையில் ஒரு நல்ல மனிதன் என்று சொல்லலாம் ஏனெனில் தற்போது கொரோனா  காலகட்டத்தில் உணவின்றி கஷ்டப்படும் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.

பொதுவாக சாய் தீனா பேட்டியில் பேசும்பொழுது வடசென்னை மக்கள் குறித்தும் ஜாதி ஒழிப்பு குறித்தும் பேசுவது வழக்கம் அந்த வகையில் தற்போது வெற்றிமாறன் மற்றும் ரஞ்சித் ஆகியவர்கள் வடசென்னையில் பிறந்தவர்களா? என்று கேள்வி எழுப்பியதுமட்டுமல்லாமல் வடசென்னை பற்றி படமெடுக்க அவர்களுக்கு என்ன தெரியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் வடச்சென்னை பசங்கள் என்றால் ரவுடி பசங்களா என்று கோபத்துடனும் வருத்தத்துடனும் பேட்டியில் பேசியுள்ளார். இவ்வாறு அவர் பேசிய வீடியோ ஆனது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.