IPL : மெகா ஏலத்தில் கோடிகளை அல்ல புதிய யுக்தியை கையிலெடுக்கும் கிரிக்கெட் வீரர்கள் சஹல்.

இந்தியாவில் அடுத்த வருடம் ஐபிஎல் 15 வது சீசன் வெற்றிகரமாக நடக்க இருக்கிறது அதற்கு முன்பாக அனைத்து அணிக்கும் பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் கொடுக்கப்பட்டுள்ளது அதாவது ஒவ்வொரு அணியும் சிறந்த நான்கு வீரர்களை தக்க வைத்துக்கொண்டு மீதி வீரர்களை ரிலீஸ் செய்யுமாறு கேட்டுக் கொண்டது.

ஆனால் ஆர்சிபி அணியின் மூன்று வீரர்கள் மட்டுமே தக்க வைத்துக்கொண்டு மீதி வீரர்களை ரிலீஸ் செய்து உள்ளது அந்த வகையில் முதலாவதாக விராட் கோலியை 15 கோடி கொடுத்து தன் வசப்படுத்தியது இரண்டாவதாக ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கிளின்மேக்ஸ் 12 கோடி கொடுத்து தன் வசப்படுத்தியது.

மூன்றாவதாக சஹலை தக்க வைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆர் சி பி அணி நிர்வாகமும் முகம்மது சிராஜை 8 கோடி கொடுத்து தன்வசப்படுத்தியது. இதனையடுத்து அந்த மூன்று வீரரகளை மட்டுமே தக்க வைத்துக் கொண்டதாக கூறியது RCB அணி கூறியது.

8 வருடமாக விளையாடி வரும் சஹலை எடுக்காமல் போனது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது. இது குறித்து பேசிய சஹல்  ஐபிஎல் நடக்க இன்னும் நீண்ட நாட்களாக இருக்கு அது குறித்து நான் இப்பொழுது பேச விரும்பவில்லை. அடுத்ததாக நான் விஜய் ஹசாரே போன்ற போட்டிகளில் விளையாட இருக்கின்றேன் அதில் சிறப்பாக செயல்படுவதை எனது குறிக்கோள்.

மேலும் அவர் 20 ஓவர் உலக கோப்பையில் இடம்பிடிக்க கடினமாக உழைத்தேன் இருப்பினும் அதில் எனக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை அனைத்து வீரர்களுக்கும் நடக்கும் இயல்பான ஒரு விஷயம் இதை பெரிதுபடுத்த ஒன்றுமில்லை.

 

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment