இந்திய ரசிகர்களுக்கு சோகமான செய்தி.. இந்தியா – நியூசிலாந்து போட்டி நடைபெறுவதில் சிக்கல்..

இந்திய அணி கடந்த 20 ஓவர் உலக கோப்பை செமி பைனலில் இங்கிலாந்திடம் தோற்று வெளியேறினாலும்.. அடுத்தடுத்து நடைபெற இருக்கின்ற போட்டிகளில் பாசிட்டிவாக விளையாட தீர்மானித்துள்ளது. அதன்படி இந்தியா – நியூசிலாந்து ஆகிய அணிகள் 3 ஒரு நாள் போட்டி, மூன்று 20 ஓவர் போட்டியில் கலந்து கொள்ள நியூசிலாந்துக்கு..

இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்திய அணியில் அனுபவிக்க வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல் போன்ற முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது அவர்களுக்கு பதிலாக  ஷிகர் தவான் மற்றும் இளம் வீரர்கள் பலர் விளையாட இருக்கின்றனர்.

இந்தியா – நியூசிலாந்து முதல் 20 ஓவர் போட்டி வில்லிங்டன் மைதானத்தில் இன்று மதியம் 12 மணிக்கு துவங்கப்பட இருந்தது இதற்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியில் மேற்கொண்டு வந்தனர் ஆனால் தற்பொழுது மோசமான வானிலை காரணமாக இன்னும் மேட்சை ஆரம்பிக்கவில்லை சரியாக சொல்ல வேண்டும் என்றால் இன்னும் டாஸ் போடுவதற்கு சில நிமிடங்கள் இருந்த நிலையில்  தொடர்ந்து மழை பெய்தது.

மேலும் மைதானம் முழுவதும் ஈரப்ப்த்துடன் காணப்படுவதால் நேரத்தை ஒத்தி வைத்து இருக்கின்றனர் தொடர்ந்து மழை பெய்தால் இந்த ஆட்டம் ரத்து செய்யவும் அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் மைதானத்தை விட்டு ரசிகர்கள் வெளியேறாமல் இருக்கின்றனர்.

ஏன்னென்றல மழை சிறிது நேரத்தில் நின்று விட்டால் இரண்டு, மூன்று ஓவர்களை குறைத்து மேட்ச் நடத்த வாய்ப்பு இருப்பதால் அங்கேயே இருக்கின்றனர் பொறுத்திருந்து பார்க்கலாம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. கடந்த முறை இந்தியா – நியூசிலாந்து ஆகிய அணிகள் 20 ஓவர் போட்டி விளையாண்டது அதில் 5- 0 என்ற கணக்கில் தொடரை  இந்திய அணி வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment