நண்பருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு!! பழைய நினைவில் சச்சின்!!

0

Sachin Tendulkar instagram photo: உலகம் முழுதும் பரவிவரும் கொரோனா வைரஸின் தாக்கத்தின் காரணமாக இந்தியாவிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வீட்டிலேயே முடங்கியுள்ள கிரிக்கெட் வீரர்கள் அவ்வப்போது தனது சமூக வலைத்தளங்களில் நேரலையில் ஈடுபட்டு அரட்டை அடித்துக் எடுத்துக்கொண்டு ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளித்து வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் தங்களது பழைய நினைவுகளை நினைவு கூறும் வகையில் புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சவுரவ் கங்குலி உடன் அவர் வீட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில் அவர் கூறியதாவது. ஒரு நாள் மாலைப்பொழுது சவுரவ் கங்குலியின் வீட்டிற்கு சென்ற சச்சின் டெண்டுல்கர் அவர்களுடன் உண்டு மகிழ்ந்து விருந்தோம்பலில் நெகிழ்ந்தார் என்றும். மேலும் உங்கள் அம்மா நன்றாக இருப்பார் என்று நம்புகிறேன். அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்றும் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் சச்சின் டெண்டுல்கர் கங்குலியை எப்பொழுதும் ‘டாடி’ என்று பாசமாக கூப்பிடுவார், அதனையும் இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தற்போது பிசிசிஐ தலைவராக பதவி வகித்து வரும் சவுரவ் கங்குலி மற்றும் சச்சின் இவர்கள் இருவரும் 15 வயதிற்கு உட்பட்டோருக்கான அணியில் ஒன்றாக விளையாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு காலகட்டத்தில் சச்சின் டெண்டுல்கரும் சவுரவ் கங்குலியும் மிகச் சிறந்த ஜோடியாக வலம் வந்தவர்கள் என்பதை அனைவரும் அறிந்ததே. அதுமட்டுமல்லாமல் இந்தியாவின் முன்னாள் கேப்டன் கங்குலியை அனைவரும் ‘தாதா’ என்று அழைத்து வருவார்கள். ஆனால் சச்சின் மட்டும் டாடி என்று செல்லமாக அழைப்பார் என்று முன்பே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

ganguli1-tamil360newz
ganguli1-tamil360newz
sachin-sourav-tamil360newz
sachin-sourav-tamil360newz
Sourav-Ganguly-and-Sachin-Tendulkar-tamil360newz
Sourav-Ganguly-and-Sachin-Tendulkar-tamil360newz