யாருப்பா இது.! என்ன மாதிரி விளையாடுராரு இளம் வீரரை புகழ்ந்து தள்ளிய சச்சின்.!

கிரிக்கெட்டின் கடவுள் என வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கர். அண்மையில் பேட்டி கொடுத்த சச்சின் டெண்டுல்கர் மிகப்பெரிய பரபரப்பை உருவாக்கி உள்ளார். அது என்னவென்றால் ஆஸ்திரேலிய இளம் வீரர் ஒருவரை புகழ்ந்து பேசியுள்ளார். நான் சிறுவயதில் விளையாடியதை அதைவிட இவர் சிறப்பாக விளையாடுகிறார் எனவும் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த இளம் வீரரான மார்க்கஸ் லபுசனே வெகுவாக புகழ்ந்துள்ளார் சச்சின் டெண்டுல்கர்.  மேலும் கூறியது அவர் எதிர்கொள்ளும் பந்துகளுக்கு ஏற்ப தனது கால்களை மிக நுட்பமாக நகற்றி சிறப்பாக ஆடி வருகிறார் என ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

ஸ்டீவ் சிமித் காயம் காரணமாக வெளியேறியதால் அவருக்கு மாற்று வீரராக பல திறமைகளை உள்ளடக்கிய வீரராக மார்க்கஸ் விளங்குவார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கணித்தது. அதற்கு ஏற்றாற்போல தனது திறமையை வெளிப்படுத்தினார் மார்கஸ் லபுசனே . அதுமட்டுமில்லாமல் 2019ம் ஆண்டு எமர்ஜென்சி ப்ளேயர் அவார்டையும் பெற்றார்.அவர் குறைந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாண்டு முதல் 10 இடத்திற்குள் வந்துள்ளார்.

ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் தனது இடத்தை அவர் தக்க வைத்துக் கொண்ட நிலையில் இப்பொழுது அவர் ஒருநாள் தொடர்களிலும் பங்கேற்று வருகிறார்.ஸ்டீவ் ஸ்மித் அடுத்தபடியாக மார்க்கஸ் சிறப்பாக விளையாடுவார் என முன்னணி கிரிக்கெட் பிரபலங்கள் தெரிவித்து வந்த நிலையில்.கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் இவரை மேலும் சிறப்பாக பாராட்டியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் தனது இடத்தில் இவரை ஒப்பிட்டுப் பார்க்கிறார் சச்சின். சச்சின் மார்க்கஸ் லபுசனேவை தனது இடத்தில் ஒப்பிட்டு பேசி உள்ளதை பார்த்த ரசிகர்கள் மற்றும் முன்னணி பிரபலங்களை சச்சினை வெகுவாக பாராட்டி வருகின்றனர். மார்க்கஸ் லபுசனே தான் இளவயதில் விளையாடி அதைவிட மிகவும் சிறப்பாக விளையாடுகிறார் என தெரிவித்தார்.

Leave a Comment