கிரிக்கெட்டி-ன் கடவுள் என வர்ணிக்கப்படும் சச்சினின் முதல் லவர் யார் தெரியுமா.! விவரம் இதோ.!!

காதலர் தினமான இன்று உலகெங்கும் இருக்கும் இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் என வயது வித்தியாசமின்றி காதலர்கள் காதலர் தினத்தை கொண்டாடி வருகின்றனர். இதில் பல்வேறு பிரபலங்களும், விளையாட்டு வீரர்களும் மற்றும் சமூக முக்கிய புள்ளிகளும் தங்களது மனைவி, காதலி ஆகியோருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.

கிரிக்கெட்டின் கடவுள் என வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் அவர்கள் காதலர் தினத்தை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்ற சச்சின் தற்போது இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்.

இவர் ஆஸ்திரேலியாவில் நடந்த புஷ் பயர் என்ற போட்டிக்காக அவர் பயிற்சி எடுத்த வீடியோவை தற்போது வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் திசை திருப்பியுள்ளார். இதிலிருந்து தெரிகிறது அவருடைய முதல் காதல் கிரிக்கெட் என்பது தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி பல பேட்டிகளில் சச்சின் அவர்களின் முதல் காதலர் கிரிக்கெட் என்றும் அடுத்தபடியாக தான் நான் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Comment