விஜயகாந்த் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் இவரின் மறைவு பல நடிகர்களுக்கு சோகத்தை கொடுத்தது ஏனென்றால் இவர் நடிக்கும் காலத்தில் பல இளம் நடிகர்களை இளம் இயக்குனர்களுக்கும் வாய்ப்பு கொடுத்தவர் அனைவரும் நடிக்க தான் வந்துள்ளோம் அதனால் அனைவருக்கும் வாய்ப்பு கொடுப்போம் என்பதை விஜயகாந்த் பின்பற்றி வந்தார்.
அதனால் தான் பல நடிகர்கள் அவரின் மறைவை ஏற்க முடியாமல் இருந்தார்கள் அது மட்டுமில்லாமல் அவரின் மறைவுக்குப் பிறகு பல நடிகர்கள் அவரைப் பற்றி புகழ்ந்து பேசியதை நாம் காதுப்பட கேட்டுள்ளோம்.
அப்படி ஒவ்வொரு நடிகர் நடிகைகளுக்கும் விஜயகாந்த் பல நன்மைகளை செய்துள்ளார். அந்த வகையில் எஸ்ஏ சந்திரசேகர் சமீபத்தில் ஒரு பேட்டியில் விஜயகாந்தின் தைரியத்தையும் அவரின் வீரத்தையும் புகழ்ந்து பேசி உள்ளார்.
நடிகர் விஜயகாந்த் படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் பத்து பேர் வந்தாலும் துரத்தி துரத்தி அடிப்பாரு. பிறந்தது மதுரை மண்ணுல ஆள் பார்க்க நல்ல வாட்டசாட்டமாய் இருப்பார் 1986ல டி நகர் பனகல் பார்க் வழியா நைட் 1.30 மணிக்கு சூட்டிங் முடிச்சிட்டு வந்தோம்.
அப்ப ஒருத்தன் கையில கத்தியோட இன்னொருத்தன துரத்திட்டு ஓடுனான் உடனே காரை நிறுத்த சொல்லி தைரியமாக ஓடிப் போயி அவன புடிச்சு அடிச்சு தி நகர் போலீஸ் ஸ்டேஷன்ல ஒப்படைச்சிட்டு வந்தோம் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் சொன்னது.