லிட்டில் சூப்பர் ஸ்டார் என செல்லமாக அழைக்கப்படும் சூப்பர் ஸ்டார் சிம்பு சமீப காலமாக படங்களில் நடிக்காமல் வந்தாலும் அந்த எதிர்மறையான எண்ணங்களை உடைத்து எறிந்துவிட்டு இப்போது அவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் ஈஸ்வரன் திரைப்படத்தை தொடர்ந்து வெங்கட்பிரபு உடன் கைகோர்த்துள்ள சிம்பு நடித்துள்ள திரைப்படம் “மாநாடு” இந்த திரைப்படம் பல்வேறு தடைகளை தாண்டி நேற்று ஒருவழியாக திரையரங்கில் வெளியானது. படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் சிறப்பான கமெண்ட்டுகளை அள்ளி வீசி வருவதால் படத்தை பார்க்க மக்கள் மற்றும் ரசிகர்கள் கூட்டம் தற்போது திரையரங்கை நாடி உள்ளது.
இதுவரை இல்லாத ஒரு புதிய கதை களத்தில் நடிகர் சிம்பு தனது அசாதாரணமான திறமையை வெளிப்படுத்தி அசத்தி உள்ளார் மேலும் இந்த திரைப்படத்தில் அவரை விட மிக முக்கிய வில்லன் ரோலில் எஸ். ஜே. சூர்யா தனது அசாதாரண திறமையை வெளிப்படுத்தி அசத்தி உள்ளார் மேலும் ஒய்ஜி மகேந்திரன், எஸ் ஏ சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, கல்யாணி பிரியதர்ஷினி போன்ற பலரும் கொடுக்கப்பட் கதாபாத்திரத்தில் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்திய அசத்தியுள்ளனர்.
இதனால் இந்த படம் தற்போது பட்டி தொட்டி எங்கும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சிம்பு கேரியரில் இது வித்தியாசமான படமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவிலேயே டைம் லூப்பில் எடுக்கப்பட்ட இரண்டாவது திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம் ஒரு பிரச்சினையை திரும்பத்திரும்ப காட்டினாலும் அதற்கான சரியான காரணங்களை தெளிவோடு படம் எடுத்துக் கூறுவதால் அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும்படி இருக்கிறது.

இந்த படத்தில் எஸ் ஏ சந்திரசேகர் முதலமைச்சராக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை அவர் நேற்று திரையரங்கில் பார்த்து கண்டு களித்தார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது.