தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருபவர் எஸ் ஜே சூர்யா. இருப்பினும் ஒரு கட்டத்தில் சினிமாவில் ஆல் அட்ரஸ் தெரியாமல் காணாமல் போனார். அதற்காக சினிமாவை விட்டு விடாமல் அதைப் பற்றி நன்கு புரிந்து கொண்டு நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியுள்ளார் எஸ். ஜே. சூர்யா.
தமிழ் சினிமாவின் ஹீரோ வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவர் ஹீரோவாக மான்ஸ்டர், நெஞ்சம்மறப்பதில்லை போன்ற படங்கள் மக்கள் மத்தியில் சூப்பர் ஹிட் அடித்ததன் காரணமாக தொடர்ந்து தற்போது ஹீரோவாக கடமையை செய் மற்றும் பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் இது ஒரு பக்கம் என்றால் மறுபக்கம் டாப் ஹீரோக்களின் படங்களில் வில்லனாக மிரட்டி வருகிறார்.
இவர் இதுவரை நடித்த மெர்சல், ஸ்பைடர் கடைசியாக கூட சிம்புவின் மாநாடு திரைப்படத்திலும் தனது அபார வெடிப்பை வெளிப்படுத்தி மாநாடு படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக நின்றார். இப்படி இருக்கின்ற நிலையில் விஷாலின் 33-வது இடத்திலும் எஸ்.ஜே. சூர்யா நடிக்கவிருப்பதாக தகவல்கள் உலா வருகின்றன.
இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் என்பவர் இயக்கியிருக்கிறார் இவர் இதற்கு முன்பாக திரிஷா இல்லனா நயன்தாரா படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது தற்போது இந்த திரைப்படத்தை அவர் படமாக எடுக்க இருக்கிறாராம். விஷாலின் 33வது திரைப்படத்திற்காக தற்போது எஸ். ஜே. சூர்யா போன்ற டாப் நடிகர்கள் ஒவ்வொருவராக தட்டி தூக்கி வருகிறது படக்குழு.
முதலாவதாக எஸ். ஜே.சூர்யாவை தட்டி தூக்கி உள்ளது இந்த படத்திற்காக அவர் 6 கோடி சம்பளம் கேட்டுள்ளாராம். மாநாடு திரைப்படத்திற்காக எஸ் ஜே சூர்யா 4 கோடி தான் சம்பளம் வாங்கியது என்பது குறிப்பிட தக்கது ஆனால் மாநாடு படம் வெளிவந்து. எஸ் ஜே சூர்யா வேற ஒரு லெவலுக்கு நடத்திச் சென்று உள்ளது. பெயரையும் புகழையும் பெற்றுததன் காரணமாக தனது அடுத்த படத்திற்கு சம்பளத்தை இரண்டு கோடியை அதிகமாக உயர்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.