சூர்யா குடும்பத்தையே சீண்டிப் பார்க்கும் நடிகர்.! வைரலாகும் ட்விட்

0
suriya karthi
suriya karthi

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர் சூர்யா கார்த்திக், ஜோதிகாவும் தமிழ் சினிமாவில் நடிகையாக இருந்தவர் தற்போதும் நடித்து வருகிறார், சூர்யாவுக்கு  மிகப்பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது. இந்த நிலையில் சூர்யா காப்பான் திரைப்படத்தில் நடித்து வருகிறார், அதேபோல் கார்த்தியும் கைதி திரைப்படத்தில் நடித்துள்ளார்.

மேலும் சூர்யா கார்த்தி இருவரும் படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் விளம்பரங்களிலும் நடித்துள்ளார்கள், அதுவும் காபி குடிக்கும் விளம்பரத்தில் நடித்திருக்கிறார், இந்த நிலையில் சிவக்குமார் ஒரு நிகழ்ச்சியில் பேசும் பொழுது நீங்கள் என்னுடைய குழந்தைகளாக இருந்தால் இனி டீ காபி குடிக்காதீர்கள் எனக் கூறினார்.

இதைப் பற்றி எஸ் வி சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் நக்கலாக விமர்சனம் செய்துள்ளார், அவர் கூறியதாவது யாரும் டீ காபி குடிக்கக் கூடாது ஆனால் இவருடைய பிள்ளைகள் மட்டும் டீ காபி விளம்பரத்தில் நடிப்பார்கள் என காட்டமாக விமர்சித்துள்ளார்.