பெரியபெரிய சாத்தான்கள் கும்பகோணத்திலும் மதுரையிலும் சுற்றி உள்ளன.! வைரலாகும் ருத்ரதாண்டவம் sneak peek வீடியோ.

0

பழைய வண்ணாரப்பேட்டை என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி.  இவர் இந்த திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார் இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது அதனால் அடுத்ததாக அஜித் மைத்துனரை வைத்து திரௌபதி என்ற திரைப்படத்தை எடுத்திருந்தார் இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது.

குறைந்த முதலீட்டில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் மாபெரும் வசூலை ஈட்டியது அதனால் மோகன்ஜி மீண்டும் அஜித்தின் மைத்துனர் ரிசார்ட் அவர்களை வைத்து ருத்ரதாண்டவம் என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் விரைவில் திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்கிறது சமீபத்திய பிரஸ்மீட்டில் மோகன் ஜி பேசும் பொழுது என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர் பத்திரிகையாளராக இருக்கிறார். அவர் திரவுபதி திரைப்படத்தை பார்த்துவிட்டு இந்த திரைப்படத்தின் கதை எனக்கு கூறினார்.

திரவுபதி திரைப்படம் வெளியாகி பல சர்ச்சைகளை சந்தித்தது அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பே பல சர்ச்சையை ஏற்படுத்தியது இந்நிலையில் ருத்ரதாண்டவம் திரைப்படம் அக்டோபர் 2ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது இந்நிலையில் இந்த திரைப்படத்தில் இருந்து sneak peek வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. ருத்ர தாண்டவம் திரைப்படத்தில் தர்ஷா குப்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

படக்குழுsneak peek  வீடியோவை வெளியிட்டுள்ளது இந்த வீடியோவில் பெரிய பெரிய சாத்தான்கள் கும்பகோணம் மற்றும் மதுரையில் அதிகமாக இருக்கிறார்கள் அவர்களை விரட்டியடிக்க வேண்டும் என மனோபாலா வசனம் பேசுகிறார்.  இந்த வசனம் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதனால் இந்த திரைப்படத்தின் முன்னோட்ட வீடியோவிலிருந்து சர்ச்சை எழும்பி விட்டது இந்த திரைப்படம் வெளியானால் எத்தனை சர்ச்சைகளை சந்திக்கப் போகிறது என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.