ஜாதி வெறியன் ஜாதி வெறியன் என முத்திரை குத்திட்டாங்க வெளியானது ருத்ரதாண்டவம் ட்ரைலர்.!

திரௌபதி பட இயக்குனர் மோகன் இயக்கத்தில் அடுத்த படைப்பாக ருத்ரதாண்டவம் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. பழைய வண்ணாரப்பேட்டை என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் மோகன். இவர் இயக்கத்தில் சென்ற வருடம் திரௌபதி திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றிபெற்றது.

திரவுபதி திரைப்படத்தில் பெரிய இயக்குனர் கிடையாது பெரிய நடிகர்கள் கிடையாது அனுபவமுள்ள நடிகை கிடையாது ஆனாலும் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தவர் பேபி ஷாலினி அண்ணனும், அஜித்தின் மைத்துனர்  நடிகருமான ரிச்சர்ட் இவர் அஞ்சலி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

அதன்பிறகு 2002ஆம் ஆண்டு காதல் வைரஸ் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் ஆனால் இவர் நடித்த திரைப்படங்கள் ரசிகர்களிடம் பெரிய அளவு வெற்றி பெறவில்லை இதனைத்தொடர்ந்து 2016ஆம் ஆண்டு அந்தமான் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு பெரிதாக எந்த ஒரு தமிழ் திரைப் படத்திலும் நடிக்கவில்லை.

கடைசியாக தமிழில் திரவுபதி திரைப்படத்தில் தான் நடித்திருந்தார் இந்த திரைப்படம் தான் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது 4 வருட இடைவெளிக்கு பிறகு இந்த திரைப்படத்தில் நடித்ததால் இவருக்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்தது இதனை தொடர்ந்து ரிசார்ட் ருத்ரதாண்டவம் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

தற்பொழுது இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

Leave a Comment