தனுஷ் நடித்த படத்தை விட பல மடங்கு புகழை பெரும் “ருத்ரதாண்டவம்” .! ராதாரவி அதிரடி பேச்சு.! வேற என்ன சொன்னார் தெரியுமா.?

0

90 காலகட்டங்களில் இருந்து பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மற்றும் ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வந்தவர் ராதாரவி. ஆரம்பத்தில் ஹீரோ, வில்லன் போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும் ஒரு கட்டத்தில் இவருக்கு வாய்ப்புகள் குறையத் தொடங்கியதால் தன்னை சினிமாவுக்கு ஏற்றவாறு மாற்றிக்கொண்டார் தற்பொழுது பெரிதும் கெஸ்ட் ரோலில் நடித்து அசத்துகிறார்.

இவரது நடிப்பு தற்பொழுதும் ரசிக்கும்படி உள்ளதால் தமிழ் சினிமா தற்போது தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறது. ராதாரவி தற்போது பல திரைப்படங்களை கையில் வைத்துள்ளார். இவரது நடிப்பில் இப்போது ருத்ர தாண்டவம் என்ற திரைப்படம் உருவாகி உள்ளது. இந்த திரைப்படத்தை மோகன்ஜி என்பவர் இயக்கியுள்ளார் ஹீரோவாக ரிச்சர்ட் ரிஷி நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் இந்த படத்தில் கவுதம் மேனன், மாளவிகா அவினாஷ், தர்ஷா குப்தா போன்ற முக்கிய பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். மோகன்ஜி கடைசியாக “திரௌபதி” என்னும் திரைப்படத்தை கொடுத்ததைத் தொடர்ந்து  அடுத்ததாக படமாக “ருத்ரதாண்டவம்” திரைப்படத்தையும் எடுத்துயுள்ளார்.

இந்த படத்திற்கு யூ /ஏ சான்றிதழை பெற்று உள்ளது இந்த படம் வருகின்ற அக்டோபர் 1ம் தேதி உலகமுழுவதும் வெளியாகவுள்ளது. இதற்கிடையே பத்திரிகையாளர்களை இந்த பட குழு சமீபத்தில் சந்தித்தது அந்த விழாவில் பேசிய ராதாரவி இந்த படத்தை பற்றியும், இயக்குனர் பற்றியும் அவர் குறிப்பிட்டு பேசியுள்ளார். முதலில் இந்த படத்தின் கதையை எனக்குச் சொல்லி வந்தனர் ஆனால் நான் நடிப்பதற்கு மறுப்பு தெரிவித்தேன்.

ஏனெனில் ருத்ரதாண்டவம் என்ற பெயரில் வி கே ராமசாமி நாகேஷ் நடித்திருக்கும் படத்தில் நானும் நடித்திருந்தேன் நாங்கள் ருத்ரதாண்டவம் என்ற பெயரில் படத்தை எடுக்க விவாதித்தோம். பிறகு சில காரணங்களால் அதனை தொடர முடியவில்லை என்றார். ஒரு வழியாக இந்த படத்தின் கதை எனக்கு பிடித்துப் போக நடித்ததாக அவர் கூறினார் மேலும்  ருத்ரதாண்டவம் டிரைலரை பார்த்து விட்டு பலரும் யாரையோ அட்டாக் செய்கிறார்கள் என கூறுகிறார்கள் அப்படியெல்லாம் கிடையாது ருத்ரதாண்டவம் படம் ஒரு மிகவும் அருமையான படம்.

மோகன்ஜி ஒரு நியாயமான கோரிக்கையை அருமையாக சொல்லி இருக்கிறார். இந்த படத்தை பார்த்துவிட்டு மற்றவர்கள் திருந்த வேண்டும் என்பதற்காகவே இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது இந்த படம் அனைவருக்குமான பொதுவான படம். வருகின்ற அக்டோபர் 1ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. கர்ணன் படம் பெற்ற புகழை விட இரண்டு மடங்கு புகழை பெரும் என ராதாரவி பேசி உள்ளார். இதற்கு முன்பாக இயக்குனர் மோகன்.ஜி இந்து மதத்தை அழிக்க நினைக்கும் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக  “ருத்ரதாண்டவம்” திரைப்படம் இருக்கும் என பேசி உள்ளார்.