கோடிக்கணக்கில் செலவு செய்து ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் பங்குப்பெற்ற ஆர்ஆர்ஆர் பட குழுவினர்கள்.! கடைசி வரிசையில் கதவு பக்கத்தில் உட்கார்ந்ததற்கான காரணம் இது தான்..

தெலுங்கு பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் ராஜமவுலி தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களை தந்து வருகிறார். அந்த வகையில் பல கோடி பட்ஜெட்டில் உருவாகி கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் தான் ஆர்ஆர்ஆர். இந்தப் படத்தில் ராம் சரண், என்.டி. ராமா ராவ் , அஜய் தேவ், ஆலியா பட் ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்த படம் கடந்த ஆண்டு வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றினைப் பெற்ற நிலையில் உலகம் முழுவதும் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது இந்த படத்தில் இடம்பெற்று இருந்த பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் வைரலான நிலையில் அந்த வகையில் ரசிகர்கள் மனதை கவர்ந்த பாடல் தான் நாட்டு நாட்டு.

இந்தப் பாடல் வெளியாகி குழந்தை முதல் நட்சத்திர பிரபலங்கள் வரை அனைவரையும் கவர்ந்த நிலையில் பலரும் இந்த பாடலுக்கு நடனமாடி சோசியல் மீடியாவில் வீடியோக்களை வெளியிட்டு இருந்தனர். இப்படிப்பட்ட நிலையில் உலகமே கொண்டாடிய இந்த பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது.

அதாவது கடந்த வாரம் 96ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்றிருந்த நாட்டு நாட்டு பாடல் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான விருதையும், த எலிபன்ட் விஸ்பரர்ஸ் என்ற தமிழ் டாக்குமென்ட்ரி படம், சிறந்த டாக்குமென்டரி குறும்படத்திற்கான விருதையும் பெற்றது.

இந்நிலையில் ஆஸ்கர் விருது விழா டால்பி அரங்கில் நடைபெற்றது அதில் ஆர்ஆர்ஆர் படத்தின் இயக்குனர் ராஜமௌலியின் குடும்பத்தினர் கடைசி வரியில் வெளியே செல்லும் கதவுக்கு அருகில் அமர்ந்திருந்தார்கள் அது குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது தற்பொழுது அது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

RRR
RRR

அதாவது நாட்டு நாட்டு பாடலுக்காக விருது வாங்கிய கீரவாணி அவரது மனைவி, பாடலாசிரியர் சந்திரபோஸ் அவரது மனைவி ஆகியோருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டதாம். ஆனால் ராஜமவுலி அவரது மனைவி அவரது மகன் மருமகள்கள், ஜூனியர் என்டிஆர் அவரது மனைவி, ராம்சரண் அவரது மனைவி ஆகியோர்கள் அனைவரும் விழாவில் கலந்துக் கொண்ட காரணத்தினால் 25 ஆயிரம் யுஎஸ் டாலர் பணம் கொடுத்த டிக்கெட் வாங்கி தான் விழாவில் கலந்துக் கொண்டார்களாம். 25 ஆயிரம் யுஎஸ் டாலர் என்பது இந்திய ரூபாய் மதிப்பில் 20 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஆர்ஆர்ஆர் குழுவினர் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து டிக்கெட்களை வாங்கி உள்ளனர்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment