பலம் வாய்ந்த CSK அணியை அடித்து துவைத்த RR.! ராயல்ஸ் கேப்டன் சாம்சன் பெருமிதம்.! சூப்பர் தகவல் இதோ.

0

இரு தினங்களுக்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்து இதனை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது தொடக்கத்தில் விக்கெட்டை கொடுக்காமல் நிதானமாக ஆடினாலும் ஒரு கட்டத்தில் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தது.

அதில் சீனியர் வீரர்களான சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு போன்றவர்கள் சொற்ப ரன்கள் எடுத்து போது வெளியேறினார் இருப்பினும் துவக்க வீரர் ருத்துராஜ் கெய்க்வாட் மட்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 60 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து அசத்தினார். இவருடன் இணைந்து ரவீந்திர ஜடேஜா குறைந்த பந்துகளில் நல்லதொரு இன்னிங்சை ஆடி அசத்தினார்.

SANIV SAMSON
SANIV SAMSON

இதன்மூலம் சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை கொடுத்து 189 ரன்களை சேர்த்தது. 190 ரன்கள் எடுத்தால் என்ற கடின இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் ஓவரிலிருந்து அதிரடியான ஆட்டத்தை காட்டியது. தொடக்க வீரர்களான  ஜெய்ஸ்வால் ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

பின்னால் வந்த மற்ற வீரர்களும் அதிரடியை காட்ட 17.3 ஓவர்களிலேயே என்ற இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதுகுறித்து பேசிய ராஜாஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சீவ் சாம்சன். தரமான வெற்றிக்கு முக்கிய காரணமே ஜெய்ஸ்வால் மற்றும் ஷிவம் துபே தான் காரணம் என கூறினார். இப்படி தரமான வீரர்களை வைத்துக்கொண்டு இப்படி பல போட்டிகளில் தோல்வி அடைந்தது என்பது குறித்து எனக்கு வேதனையை கொடுக்கிறது.

RUTHURAJ
RUTHURAJ

பேட்டிங்கில் பலம் என்ன எங்களால் என்ன செய்ய முடியும் என்பது எங்களுக்கு தெரியும் ஆடுகளம் நான் நினைத்து போன்று இருந்தது அதை நினைத்து மகிழ்ச்சி கொள்கிறேன். இந்த போட்டியில் சிஎஸ்கே அணியில் தொடக்க வீரரான ருத்ராஜ் கெய்க்வாட் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார்.  அவரது ஷாட்கள் ஒவ்வொன்றும் சிறப்பாக இருந்தது என கூறினார்