ரவுடி பேபி பாடலுக்கு ஆர்யா மனைவி சாயிஷா போட்ட குத்தாட்டம்.! என்னம்மா வளஞ்சு நெளிஞ்சு ஆடுறாங்க வைரலாகும் வீடியோ.

தனுஷ் நடிப்பில் கடந்த வருடம் 2018 ஆம் ஆண்டு இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியாகிய மாஸ் என்டர்டைன்மென்ட் திரைப்படம் மாரி 2. இந்த திரைப்படத்தில் சாய்பல்லவி, வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், வினோத் டோவினோ தாமஸ் என பலர் நடித்திருந்தார்கள்.

இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜாதான் இசையமைத்திருந்தார், மேலும் திரைப்படத்தில் சாய்பல்லவி தனுஷ் ஆடிய ரவுடி பேபி பாடல் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது, இந்த பாடல் யூ டியூபில் பல சாதனைகளை நிகழ்த்தியது. இந்த பாடலுக்கு நடன இயக்குனர் பிரபுதேவா தான் நடனம் அமைத்து இருந்தார்.

மேலும் ரவுடி பேபி பாடலுக்கு பல பிரபலங்கள் நடனமாடி வீடியோவை வெளியிட்டு இருந்தார்கள், இந்த நிலையில் நடன இயக்குனர் ஸ்ரீதர் உடன் ரவுடி பேபி பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளார் ஆர்யா-சாயிஷா.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது, ஆனாலும் சாயிஷாஆட்டத்தைப் பார்த்து ரசிகர்கள் மெய்சிலிர்த்து உள்ளார்கள்

Leave a Comment