தற்போது உள்ள சின்னத்திரை நடிகைகள் அனைவரும் வெள்ளித்திரை நடிகர்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என போட்டி போட்டுக் கொண்டு கவர்ச்சியில் அதிக ஆர்வம் காட்டி வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
அந்த வகையில் பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமான ரோஷ்னியும் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இவர் கருப்பாக இருக்கிறார் என்று பலரும் கிண்டல் செய்து வந்தார்கள் அதன்பிறகு தனது சிறந்த நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி கருப்பு பேரழகி என்று அனைவராலும் அழைக்கப்பட்டார். அந்த வகையில் தற்பொழுது பாரதிகண்ணம்மா சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் இவர் இந்த சீரியலின் மூலம் குழந்தை நட்சத்திரங்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்துள்ளார்.
ஏனென்றால் இந்த சீரியல் ஒரு பெண் எவ்வளவு தைரியமாகவும், தன்னம்பிக்கையுடனும் இருக்கவேண்டும் என்பதை மையமாக வைத்து இயக்கப்படுவதால் தற்போது இளம் பெண்களுக்கு ஏற்றதாக இந்த சீரியலின் கதை அமைந்துள்ளது.
இந்நிலையில் இவரின் வசீகரமான அழகினால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வளைத்துப் போட்டுள்ளா.ர் தற்பொழுது மஞ்சள் நிற உடையில் மஞ்ச காட்டு மைனா போல் இருக்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை அள்ளிக் குவித்து வருகிறார்கள்.இதோ அந்த புகைப்படம்.