இணையத்தில் வைரலாகும் ரோஜா சீரியல் நடிகையின் புதிய புகைப்படம்.!

கடந்த சில நாட்களாக சின்னத்திரையை சேர்ந்த பல நடிகைகள் வெள்ளித்திரைக்கு எப்படியாவது மாறிவிட வேண்டும் என்பதால் பட வாய்ப்பிற்காக நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மட்டும் தான் கவர்ந்து வருகிறார்கள் இவ்வாறு வெளியிடும் ஒரு சில நடிகைகளுக்கு மட்டுமே பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

சின்னத்திரையில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சீரியலாக ஒளிபரப்பாகி வருவது ரோஜா சீரியல் இந்த சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது அதுமட்டுமல்லாமல் TRPயில் அதிக புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை கடந்த சில மாதங்களாக பிடித்து வருகிறது.

மேலும் அந்த சீரியலில் கதாநாயகனாக சிப்பு சூரியன் என்பவர் நடிக்க பிரியங்கா என்பவர் ரோஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இந்த இருவருமே ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகர்,நடிகையாக திகழ்ந்து வருகிறார்கள் அந்த அளவிற்கு தங்களது நடிப்பை வெளிப்படுத்தி மக்களை அதிகம் கவர்ந்து விட்டார்கள் என்றுதான் கூறவேண்டும்.

மேலும் இவர்கள் நடிக்கும் கதாபாத்திரத்தை அடுத்து முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் காயத்ரி இவர் சின்னத்திரை சீரியல்களில் நடிப்பதற்கு முன்பே அஜித் மற்றும் விஜய் ஆகிய இருவரும் இணைந்து நடித்து வெளியான ராஜாவின் பார்வையிலே என்ற திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம் மேலும் 37 வயதாகும் நடிகை காயத்ரி இன்னும் சினிமாவில் நிறைய திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பதற்காக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

kayathri

அந்த வகையில் தற்போது இவரது இளம் வயது புகைப்படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது அந்த புகைப்படத்தில் காயத்ரி பார்ப்பதற்கு கதாநாயகி போல் காட்சியளிக்கிறார் மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரை அழகாக வர்ணித்து வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version