இந்த வயதிலும் ஆண் வீரர்களுக்கு இணையாக கபடி விளையாடும் ரோஜா.! வைரலாகும் வீடியோ.

நடிகை ரோஜா இளம் கபடி வீரர்களுடன் குதுகலமாய் விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது. இவர் செம்பருத்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் ஆனார்.

90s காலகட்டத்தில்  முன்னணி நடிகையாக வலம் வந்த ரோஜா, ரஜினி,  கார்த்தி,  விஜய்,  பிரபுதேவா, சரத்குமார், போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார் நடிகை ரோஜா. இதை தொடர்ந்து இன்று வரையிலும்  சினிமாவில் நடித்து வருகிறார் அதுவும் அக்கா,  அத்தை, போன்ற குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவர் நகரி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாகவும் இருக்கிறார் ரோஜா. இந்நிலையில் ரோஜாவின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.  அதாவது நகரி பகுதியில் இளைஞர்களுக்கான கபடி போட்டியை தொடங்கி வைக்க சென்றார். அப்போது அவருக்கு அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

இதைத்தொடர்ந்து யாரும் எதிர்பாராத வகையில் திடீரென இளைஞர்களுடன் களத்தில் இறங்கி கபடி விளையாட தொடங்கிவிட்டார் ரோஜா.

roja
roja

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

Leave a Comment