விஜயுடன் மல்லுக்கட்டும் ரோலக்ஸ்.! லோகேஷ் கனகராஜ் லியோவில் வைத்த டிவிஸ்ட்.!

Rolex suriya join leo movie : தமிழ் சினிமாவில் மோஸ்ட் வான்டட் இயக்குனர் என்று அழைக்கப்படுபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இவர் இயக்கத்தில் வெளியாகிய மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில்  தற்பொழுது தளபதி விஜய்யை வைத்து லியோ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து மாஸ்டர் திரைப்படத்தை இயக்கியிருந்தார் ஆனால் அந்த திரைப்படம் 50% விஜய் திரைப்படமாகவும் 50 சதவீதம் லோகேஷ் சாயலில் இருந்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் லியோ திரைப்படம் முழுக்க முழுக்க லோகேஷ் சாயலில் இருக்கும் என கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் லியோ திரைப்படம் எல் சி யு கான்செப்டில் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த லியோ திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து அர்ஜுன், சஞ்சய்தத், மிஸ்கின், கௌதம் மேனன், திரிஷா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. 125 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் தற்போது போஸ்ட் ப்ரடக்ஷன் வேலைகளில் மிகவும் பிசியாக இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

ஏற்கனவே ஃபர்ஸ்ட் சிங்கிள் சஞ்சய்தத் கேரக்டர் ஆண்டனி தாஸ், அர்ஜுனின் ஹெரால்ட் தாஸ் ஆகிய க்ளிலிம்ஸ் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. லியோ திரைப்படத்திலிருந்து வெளியாகும் ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. விஜயுடன் திரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய்தத், அர்ஜுன், மிஷ்கின் கௌதம் மேனன் மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறார்கள். ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகிய விக்ரம் திரைப்படத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத்பாஸில், நரேன் செம்பன் வினோத் என பல டாப் ஹீரோக்கள் இருந்தாலும் கிளைமாக்ஸ் காட்சியில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் சூர்யா நடித்து தெறிக்க விட்டார்.

சூர்யாவின் ஐந்து நிமிட காட்சிகள் திரையரங்கை அதிர வைத்தது. இதனால் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை தனி படமாகவே இயக்க லோகேஷ் கனகராஜ் முடிவு செய்துள்ளாராம் அதற்கு சூர்யாவும் ஓகே சொல்லிவிட்டதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. அதேபோல் லோகேஷன் எல் சி யூ வில் ரோலக்ஸ் கேரக்டர் கண்டிப்பாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. அந்த வகையில் லியோ திரைப்படம் லோகேஷன் எல்சி யூ வில் இணைந்துள்ளதால் இதில் சூர்யா நடித்திருப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தார்கள்.

இந்த நிலையில் தற்போது ஒரு தரமான அப்டேட் கிடைத்துள்ளது விக்ரம் திரைப்படத்தில் கைதியில் நடித்த கார்த்தியின் டெல்லி கேரக்டர் இடம் பெற்று இருந்தது அதாவது வாய்ஸ் ஓவரா வைத்து மட்டும் ரசிகர்களுக்கு ஹைப் கொடுத்திருந்தார் லோகேஷ். அதேபோல் லியோ திரைப்படத்திலும் விஜய்யும் சூர்யாவும் ரோலக்ஸ் கேரக்டரில் போனில் பேசிக் கொள்வது போல் செம மாஸ் சீன் வைத்துள்ளாராம் லோகேஷ்.

இந்த சீன் தான் லியோ திரைப்படத்தில் செம மாஸாக பேஸ்ட் ஆக இருக்கும் என பட குழு தரப்பில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.

Leave a Comment

Exit mobile version