ரோஜா சீரியலில் இருந்து விலகும் வில்லி அனு.! இவர் விலகுவதற்கு இதுதான் காரணமா.?

பொதுவாக ஹீரோயின்களுக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.அதேபோல் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் பலரும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து உள்ளார்கள் அந்த வகையில் ரசிகர்களும் க்யூட்  வில்லி  என்று பல நடிகைகளை கூறி வருகிறார்கள்.

அந்தவகையில் தனது சிறந்த நடிப்பின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை ஷாமிலி சுகுமார். தற்பொழுது டிஆர்பி-யில் முன்னணி நாடகமாக வலம் வந்து கொண்டிருக்கும் ரோஜா சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் என்ற அனு கேரக்டரில் நடித்து பிரபலமடைந்தார்.

இந்த சீரியலில் ஹீரோ மற்றும் ஹீரோயினுக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறதோ அதே அளவிற்கு வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உருவாகி உள்ளது.

இவ்வாறு பிரபலமடைந்து உள்ள இவர் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றையும் வைத்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் இவர் கர்ப்பமாக இருப்பதாக கூறி தனது கணவருக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்து இருந்தார்.அந்த வீடியோவை தனது யூடியூப் சேனலில் வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதையும் கொள்ளை அடித்தார் பலரும் அதற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தார்கள்.

shamili sukumar
shamili sukumar

இந்நிலையில் தற்பொழுது இவர் யூடியூப் சேனலில் ரோஜா சீரியலில் இருந்து விலகப் போவதாகவும் அதற்கான காரணத்தையும் கூறியுள்ளார். அதாவது தற்பொழுது கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருவதால் கருவை பாதித்து விடுமோ என்று பயமாக இருக்கிறது என்றும் டாக்டர்களின் அறிவுரையின் படி இதற்குமேல் வீட்டிலேயே பத்திரமாக இருக்க வேண்டும் என்பதாகவும் கூறியுள்ளார்.இது நல்ல முடிவு என்பதாக இருந்தாலும் இவரின் ரசிகர்கள் பலர் சோகமான கமெண்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Comment