சிவகார்த்திகேயன் திரைப்படத்தில் நடித்துள்ள ரோஜா சீரியல் நடிகை.. அதுவும் இந்த கதாபாத்திரத்திலா..

0

தொலைக்காட்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டு தனது விடா முயற்சியால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். காமெடி நிறைந்த திரைப்படங்களில் நடித்து வந்த இவர் தற்போது ஆக்ஷன் திரைப்படங்களிலும் நடித்து சினிமாவில் கலக்கி வருகிறார்.

அந்த வகையில் இவர் நடிப்பில் டாக்டர் திரைப்படம் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்பொழுதோ முடிந்த நிலையில் கொரோனாவின் காரணமாக இதுவரையிலும் வெளியாகமல் இருந்துவருகிறது எனவே விரைவில் இத்திரைப்படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து மேலும் அயலான் மற்றும் டான் ஆகிய திரைப்படங்களின் படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு தொடர்ந்து ஏராளமான திரைப்படம் நடித்து மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் சிவகார்த்திகேயன் திரைப்படத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் நடிகை ஒருவர் நடித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ரோஜா சீரியல் தொடர்ந்து டிஆர்பி-யில் முன்னணி நாடகமாக வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியவர் தான் நடிகை ஷாமிலி இவர் சமீபத்தில் தான் இந்த சீரியலில் இருந்து விலகினார்.

இவர் கர்ப்பமாக இருப்பதால் மருத்துவரின் அறிவுரையின்படி சீரியலில் நடிப்பதை நிறுத்தியுள்ளார். இந்நிலையில் நடிகை ஷாமிலி சிவகார்த்திகேயன் மற்றும் ஹன்சிகா கூட்டணியில் வெளிவந்த மான்கராத்தே திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள காட்சியின் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

shamili 09
shamili 09