நிச்சயதார்த்தம் செய்துவிட்டு 5 ஆண்டுகளாக டாட்டா காமித்த சீரியல் நடிகர்.! ஒருவழியாக காதலனை கரம் பிடித்த ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி..

பிரபல சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி மிகவும் எளிமையாக விநாயகர் கோவிலில் தனது திருமணத்தை முடித்து இருக்கும் நிலையில் அது குறித்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவு செய்ய சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ரோஜா சீரியலின் மூலம் கதாநாயகியாக கடந்த நான்கு ஆண்டுகளாக வெற்றிகரமாக ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் தான் நடிகை பிரியங்கா நல்காரி.

இந்த சீரியல் சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்த நிலையில் தற்பொழுது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீதா ராமன் சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் எல்லாத்துக்கும் சாரி.. எப்படா வருவ நான் உனக்காக காத்துக் கொண்டு இருக்கேன் டா.. என்று மிகவும் எமோஷனலாக தன்னுடைய காதலை நினைத்து உருக்கமான பதிவை வெளியிட்டு இருந்தார்.

அதாவது கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் பிரியங்கா நல்காரி மற்றும் தெலுங்கு சீரியல் நடிகர் ராகுல் இருவரும் சில மாதங்களாக காதலித்து வந்தார்கள் எனவும் பிறகு திருமண நிச்சயதார்த்தம் முடிந்து ஒரு வருடமான நிலையில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நின்று போனதாகவும் தகவல் வெளியானது. பிறகு இது குறித்து பிரியங்கா எங்களுக்கு கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்தது.

priyanga nalkari 1
priyanga nalkari 1

ஆனால் ஒரு சில காரணங்களால் கல்யாணம் தேதி தள்ளிக் கொண்டு போனது மேலும் எங்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடு தீர்க்க முடியாத அளவிற்கு பெரிதாகிவிட்டது எனவே ஹைதராபாத்தில் இருந்து மலேசியா சென்ற ராகுல் என இதுவரை தொடர்பு கொள்ளவே இல்லை கடைசி முயற்சியாக மிகவும் கஷ்டப்பட்டு அவரை போனில் தொடர்பு கொண்டேன் ஆனால் எந்த பயனும் இல்லை இதற்கு மேல் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை இனிமேல் எங்களுக்குள் எதுவும் கிடையாது நிச்சயதார்த்தம் கூட முடிஞ்சிடுச்சி இனிமேல் அவரவர் வாழ்க்கையை பார்த்துக் கொள்ள வேண்டியதுதான் என கூறினார்.

priyanga nalkari 4
priyanga nalkari 4

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது பிரியங்கா நல்காரி மற்றும் ராகுல் இருவரும் விநாயகர் கோவிலில் மிகவும் சிம்பிளாக திருமணம் செய்துக் கொண்ட நிலையில் அது குறித்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பிரியங்கா நல்காரி பதிவு செய்துள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

priyanga nalkari 5
priyanga nalkari 5

Leave a Comment