சிவகார்த்திகேயனின் மான்கராத்தே படத்தில் நடித்துள்ள ரோஜா சீரியல் நடிகை.! அட இத்தனை நாளா இது தெரியாம போச்சே.!

0

சமீபகாலமாக தொலைக்காட்சி நிறுவனங்கள் அனைத்தும் டிஆர்பி யில் முதல் இடம் பிடிப்பதற்காக புதிதுபுதிதாக சீரியல் மற்றும் புதிது புதிதாக நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி அதில் வெற்றி கண்டு வருகிறார்கள். அதிலும் சீரியலில் பலத்த போட்டி நிலவிவருகிறது இருந்தாலும் நீண்ட காலமாக சன் தொலைக்காட்சி தான் சீரியலில் முன்னிலை வகித்து வருகிறது.

மேலும் சன் தொலைக்காட்சி, விஜய் தொலைக்காட்சி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் ஆகிய அனைத்து தொலைக்காட்சிகளும் சீரியலில் போட்டி போட்டுக் கொள்கிறார்கள் அது மட்டுமில்லாமல் ஒரு சில தொலைக்காட்சிகள் ரியாலிட்டி ஷோ மூலம் டிஆர்பி – இல் முதல் இடம் பிடிக்கிறார்கள். இந்த நிலையில் சன் தொலைக்காட்சியில் நீண்ட காலமாக அனைத்து மக்களையும் வெகுவாக கவர்ந்து வரும் சீரியல் என்றால் ரோஜா சீரியல் தான்.

இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆகி விட்டன. மேலும் இந்த சீரியலில் சிபு சூரியன் கதாநாயகனாக நடித்து வருகிறார் அதேபோல் கதாநாயகியாக பிரியங்க நல்கரி நடித்து வருகிறார். இந்த சீரியல் நீண்டகாலமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது இதுவரை 800 எபிசோடுகளை கடந்து விட்டு பிரமாண்டமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த ரோஜா சீரியல் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ஷாமிலி.

shamili
shamili

இவர் ஏற்கனவே வாணி ராணி சீரியலில் நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் பாசமலர் பொன்னூஞ்சல், மாப்பிள்ளை போன்ற பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார் மேலும் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகிய ஜீவா திரைப்படத்திலும் நடித்துள்ளார் இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் ஆனால் சிவகார்த்திகேயன் ஹன்சிகா நடிப்பில் வெளியாகிய மான்கராத்தே திரைப்படத்தில் ரோஜா சீரியல் நடிகை நடித்துள்ளார் என்பது பலருக்கும் தெரியாத விஷயமாக இருந்து வந்தது.

ரோஜா சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் ஷாம்லி இவர் மான் கராத்தே திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இந்த தகவல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும் ஷாமிலி சமிபத்தில் கர்ப்பமாக இருந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் அதனால் ரோஜா சீரியலில் தற்பொழுது ஷாமிலிக்கு பதிலாக வேறு ஒரு நடிகை நடித்து வருகிறார் விரைவில் இவர் மீண்டும் நடிக்க வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்பொழுது ரோஜா சீரியல் வில்லி கதாபாத்திரத்தில் விஜே அக்ஷயா  நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

shamili
shamili