ரோஜா சீரியல் ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி.! இனி சன் டிவி டிஆர்பி ரேட்டிங் அவ்வளவுதானா.!

தமிழில் பல தொலைக்காட்சி நிறுவனங்கள் தங்களின் டிஆர்பி யில் முதல் இடத்தை பிடிப்பதற்காக பல நிகழ்ச்சிகள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் சீரியல் என ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் சீரியலில் முன்னணியில் இருப்பது சன் தொலைக்காட்சி தான். இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் சீரியலுக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது அதுமட்டுமில்லாமல் இல்லத்தரசிகள்பலரும் இந்த சன் தொலைக்காட்சி சீரியலை தான் விரும்பி பார்க்கிறார்கள்.

ஆனால் சமீபகாலமாக சன் தொலைக்காட்சியை ஓவர்டேக் செய்து வருகிறது மற்ற தொலைக்காட்சி நிறுவனங்கள். அதிலும் குறிப்பாக விஜய் டிவி, ஜீ தமிழ் கலர்ஸ் தொலைக்காட்சிகள் தங்களின் டிஆர்பி ரேட்டிங்கை ஏற்றுவதற்காக அரும்பாடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் டிஆர்பிஎல் முதல் இடத்தில் இருக்கும் சீரியல் என்றால் ரோஜா சீரியல் தான்.

இந்த சீரியல் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்து முதலிடத்தில் இருந்து வருகிறது இந்த சீரியலில் சிபு  சூரியன் என்பவர் கதாநாயகனாகவும் பிரியங்க நல்கரி கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்கள். ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்று வரும் இந்த சீரியல் கடந்த சில தினங்களுக்கு முன்பு எபிசோடுகளை கடந்து பிரமாண்ட மைல் கல்லை எட்டியது.

roja
roja

இதுகுறித்து சன் தொலைக்காட்சி நன்றி தெரிவித்து ரசிகர்களுக்காக ஒரு ட்வீட் ஒன்றை வெளியிட்டது. இந்த நிலையில் இந்த சீரியலில் ஹீரோவாக நடித்து வரும் சிபு சூரியன் என்னுடைய கடைசி சீரியல் ரோஜா தான் என கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார் இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளது என்னவென்றால் உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும் ஆனால் ரோஜா சீரியல் என்னுடைய கடைசி சீரியலாக இருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளாக நான் இதில் நடித்து வருகிறேன் இப்பொழுது OTT மற்றும் படங்கள் போன்ற மற்ற தளங்களில் வெவ்வேறு படங்களில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளேன்.

நான் சீரியலில் நடிக்கும் பொழுது சராசரியாக நடிகராக இருந்தேன் இப்பொழுது நிறைய கற்றுக் கொண்டேன் அதனால் தொலைக்காட்சி சீரியல்களில் பணி புரிந்த பொழுது நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன் நிச்சயமாக படங்கள் ஆபத்தானவை சவால்கள் நிறைந்த என எனக்கு தெரியும் ஆனால் அதை எதிர்கொள்ள நான் தயாராகிவிட்டேன் மேலும் இயக்குனர் இசையமைப்பாளர் ஹம்சலேகா இயக்கம் சகுந்தலா என்ற கன்னட திரைப்படத்தில் நடித்து வருகிறேன்.

அதேபோல் தமிழிலும் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறேன் இப்பொழுது அது தொடர்பான எந்த ஒரு விஷயத்தை என்னால் கூற முடியாது எனஅதில் கூறியுள்ளார். இருந்தாலும் இவர் ரோஜா சீரியல் விட்டு வெளியே செல்வது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம் தான் ஏனென்றால் இவர்கள் ரோஜா சீரியலில் செய்யும் ரொமான்ஸ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தது என்று அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

Leave a Comment