ரோஜா சீரியல் நடிகையை திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி ஏமாற்றிய பிரபலம்.!

0

தற்பொழுது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு நல்ல தரமான கதை உள்ள சீரியல்களை இயக்கி  டிஆர்பியை எகிற வைத்து வருகிறார்கள். அந்த வகையில் அனைத்து தொலைக்கட்சிகளாலும் பின்னுக்கு தள்ளப்பட்ட சன் டிவி தற்பொழுது டிஆர்பி யில் நம்பர்-1 தொலைக்காட்சியாக விளங்குகிறது.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகள் பெரிதாக பிரபலம் அடையவில்லை என்றாலும் தற்போது புதிய முக நடிகர், நடிகைகள் பலரை களமிறக்கி உள்ளார்கள் சன்டிவி. அதுவும் நடிகைகள் கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி விடுகிறார்கள்.

எனவே ரசிகர்களும் அந்த நடிகைகளுக்காக சீரியல்களை பார்ப்பதும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.அந்த வகையில் சில ஆண்டுகளாக டிஆர்பி முன்னணி வகித்து வரும் சீரியல் ரோஜா. தற்போது இந்த சீரியல் தான் மற்ற அனைத்து தொலைக்காட்சிகளையும் பின்னுக்கு தள்ளியுள்ளது. அந்த வகையில் ரோஜா சீரியலின் மூலம் புதிதாக தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை பிரியங்கா நால்காரி.

இவர் தெலுங்கில் பல சீரியல்களில் நடித்து பிரபலமடைந்தன் இதன் மூலம் இவர் சன் டிவிக்கு அறிமுகமானார்.  தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் மிக கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். இந்நிலையில்  பிரியங்கா நல்கரி கடந்த 2019ஆம் ஆண்டு தனது இன்ஸ்டாகிராமில் எல்லாத்துக்கும் சாரி எப்படா வருவ உனக்காக காத்துக் கொண்டே இருக்க வேண்டா என்ற ஒரு பீலிங்கான பதிவை வெளியிட்டு இருந்தார்.

இந்தவகையில் இதனைப்பற்றி பிரியங்காவிடம் ரசிகர்கள் கேட்டதற்கு இவர் தெலுங்கில் சீரியலில் நடித்து வரும் ராகுல் என்பவரை காதலித்து 2018ஆம் ஆண்டு நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்களாம். இந்நிலையில் நிச்சயதார்த்தம் முடிந்து ராகுல் ஹைதராபாத்தில் இருந்து மலேசியாவிற்கு சென்றாராம்.

மலேசியா சென்ற பிறகு பிரியங்காவிடம் ராகுல் பேசவே இல்லையாம் எந்த தொடர்பும் இல்லாத காரணத்தினால் பிரியங்கா ஒரு நாள் பேச முயன்றுள்ளார் எதற்கும் பயனில்லாமல் போய் விட்டதாம்.  இந்நிலையில் பிரியங்கா இனிமேல் எனக்கும் ராகுலுக்கும் எந்த தொடர்பும் கிடையாது அவரவர் வாழ்க்கை அவரவர் பார்த்துக்கொண்டால் போதும் என்று கூறியுள்ளார். இந்நிலையில் பிரியங்கா மற்றும் ராகுல் நிச்சயதார்த்தத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.