ரோகித் சர்மாவின் பேச்சால் கடுப்பான தோனி ரசிகர்கள்.! விவரம் இதோ!!

dhoni-and-rohit
dhoni-and-rohit

கிரிக்கெட்டில் தலை சிறந்த வீரர்களாக விளங்க படுபவர்கள் வெகுசிலரே அந்த வகையில் கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர், சேவாக் டிராவிட் கங்குலி போற்ற அடுத்தடுத்த வீரர்கள் இருந்து வருகின்றனர் அந்தவகையில் மகேந்திர சிங் தோனியும் ஒருவர். இவர் உலக கோப்பை அரை இறுதிக்கு பின் எந்த ஒரு போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் அவரது ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் இருந்து வந்தனர் இதனையடுத்து அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பார்க்க முடியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமானதால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது இதனால் அதற்கும் முட்டுக்கட்டை போடும் விதமாக அமைந்தது.தற்பொழுது தோனி ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் அழ்துள்ளனர். அவரது ரசிகர்கள் இனி தோனி விளையாடுவாரா விளையாட மாட்டாரா என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.

இந்த கேள்வியை கிரிக்கெட் ரசிகர்கள் இந்திய அணியின் துணை கேப்டனாக ரோஹித் சர்மாவிடம் பல தடவை கேட்டுள்ளனர் இதனால் ஆத்திரமடைந்த ரோகித் சர்மா ஏன் என்னிடம் கேட்கிறீர்கள் நீங்கள் தோனியிடம் போய் நிங்களே கேளுங்கள் அவர் அணியில் இடம் பிடிப்பாரா மாட்டாரா என கூறி கேள்விக்கு பதில் அளித்தார் ரோகித் சர்மா.

மேலும் அவர் இப்பொழுது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது முடிந்த பின் நீங்கள் கார், பைக், அல்லது நடந்து போய் கூட கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் அவரைப் பற்றி எந்த ஒரு செய்தியும் எனக்கும் தெரியாது என்று கோபத்தில் பதிலளித்தார். இவ்வாறு கூறியது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.