இந்தியாவில் உலகக்கோப்பை போட்டி துவங்கி வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கிறது சில தினங்களுக்கு முன்பு இந்தியா – பாகிஸ்தான் அணிகள் பல பரிட்சை நடத்தின. இந்திய அணி பந்து விச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை ருசித்தது. அடுத்து வருகின்ற 19ஆம் தேதி பங்களாதேஷ் அணியை எதிர்த்து இந்திய அணி விளையாட இருக்கிறது.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான வாசிம் அக்ரம் ரோகித் சர்மா குறித்து பேசி உள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்.. ரோகித் சர்மா ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது விளையாடிய விதம் மிகச் சிறப்பாக இருந்தது குறிப்பாக ரிஸ்க் எடுக்காமல் பலமான ஷாட்டுகளை அவர் கச்சிதமாக விளையாடுகிறார்.
மற்ற பேட்ஸ்மானங்களை காட்டிலும் அவரிடம் கூடுதலான டைமிங் இருக்கிறது எனவே அவரால் அனைத்து பந்துகளையும் மிகச் சிறப்பாக விளையாட முடிகிறது விராட் கோலி நிதானத்துடன் விளையாடி வந்தாலும் ரோகித் சர்மா பீஸ்ட் போன்று அதிரடியாக விளையாடி வருகிறார் என தெரிவித்தார்.
மேலும் பேசிய வாசிம் அக்ரம் சச்சின் 44 போட்டிகளில் 6 சதங்கள், சங்ககாரா 35 போட்டியில் 5 சதங்கள், பாண்டிங் 42 போட்டியில் 5 சதங்கள் அவர்களை காட்டிலும் தற்போது ரோகித் சர்மா 19 போட்டியிலேயே 7 சதங்கள் அடித்துள்ளது அபாரமான விடயம் எனவே அவருக்கு எதிராக பவுலர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மிஸ்பா உல் ஹக் கூறுகையில்.. ரோகித் சர்மா ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடிய விதத்தை பார்த்த பின்னர் மற்ற அணிகளுக்கு கண்டிப்பாக அழுத்தம் ஏற்பட்டிருக்கும் ஏனெனில் அவர் எப்படி வந்து வீசினாலும் பவுண்டரிகளாக விளக்குகிறார் குறிப்பாக ஆப்ஸ் பக்கம் பந்தை வீசினால் அதனை கட் செய்து பவுண்டரி அடிக்கிறார்.
நேராக பந்தை வீசினால் பவுலரின் தலைக்கு மேல் தூக்கி அடிக்கிறார். ஷார்ட் பீட்ச் பந்து வீசினால் புல் ஷாட் மூலம் 6 அடிக்கிறார். இப்படி பந்து அவருக்கு எதிராக எவ்வாறு வீசினாலும் அதனை நேர்த்தியாக கையாளுகிறார் என்பதால் அவருக்கு எதிராக பவுலர்கள் எப்படி பந்து வீச வேண்டும் என்பது தெரியாமல் புலம்புகின்றனர் கூறினார். இவர்கள் சொன்னது போலவே பாகிஸ்தான் போட்டியிலும் ரோஹித் சர்மா பவுலர்களை வச்சி செய்தார்.