நேற்று நடைபெற்ற போட்டியில் ரோகித் சர்மா அவுட் கிடையாது.? ஆதாரத்தை வெளியிட்ட கிரிக்கெட் ரசிகர்கள்.!

0
Rohit-Sharma
Rohit-Sharma

உலக கோப்பை போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது அதனால் ஒவ்வொரு போட்டியும் ரசிகர்களால் பெரிதும் பார்க்கப்பட்டு வருகிறது, நேற்றைய உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியும் வெஸ்ட் இண்டீஸ் அணியும்  மோதிக்கொண்டன இதில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

இந்த நிலையில் நேற்றைய போட்டியில் தொடக்க வீரர்களான ரோகித் சர்மா மற்றும் ராகுல் களம் இறங்கினார்கள், இவர்கள் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள், அதன் பிறகு ரோகித் சர்மா 18 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார், ரோகித் சர்மாவிற்கு அவுட் கொடுக்கப்பட்டது, தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது சமூகவலைதளத்தில்.

முதலில் ரோஹித் சர்மாவுக்கு அவுட் கேட்டபொழுது நடுவர் கொடுக்கவில்லை, அதன் பிறகு மூன்றாவது நடுவரிடம் சென்ற பொழுது அவுட் கொடுத்தார், ஆனால் ரீப்ளேயில் பந்து பேட்டில் பட்டதா படவில்லை என்ற பெரும் குழப்பம் ஏற்பட்டது அதனால் அவுட் இல்லாததை அவுட் கொடுத்து விட்டார் நடுவர் என இந்திய ரசிகர்கள் புலம்புகிறார்கள்.

இந்திய அணி 50 ஓவர் முடிவில் 268 ரன்கள் எடுத்திருந்தது 269 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 143 ரன்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வி அடைந்தது.