ரோஹித் ஷர்மா கொரோனா தடுப்பு பணிக்காக எவ்வளவு கொடுத்துள்ளார் தெரியுமா.?

கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப் படைத்து கொண்டு வருகிறது இந்த நிலையில் இந்தியாவிலும் தற்போது அதன் பாதிப்பு அதிகமாகி வருகிறது. இதனை தொடர்ந்து இந்தியா முழுவதும் 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடை ஏப்ரல் 14 வரை நீடிக்கும் என இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

சீனாவிற்கு அடுத்ததாக அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது. இந்தியாவில் 138 கோடி மக்கள் உள்ளனர். இந்நிலையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு என்பது ஏழை எளிய மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என பலர் தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவில் ஏழை எளிய மக்கள் அதிகம் என்பதால் தினகூலியில் ஈடுபட்டுவந்த தொழிலாளர்கள் மற்றும் அவரது குழந்தைகள் உணவிற்கு கஷ்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. பசி பட்டினியையும், வேலையில்லா தொழிலாளர்களின் நிலைமையை சமாளிக்கவும் மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது.

இந்த நிலையில் சினிமா நட்சத்திரங்கள் மற்றும் விளையாட்டு பிரபலங்கள் நிவாரணப் பொருட்களும், நிதி உதவியும் வழங்கி வருகின்றனர். தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான பவன் கல்யாண் 2 கோடி அளித்துள்ளார். நடிகர் பிரபாஸ் 4 கோடி, நடிகர் அல்லி அர்ஜுனா 1.25 கோடி வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் இந்திய அணியின் துணை கேப்டனான ரோஹித் சர்மா அவர்கள் கொரோனா தடுப்பு பணிக்காக சுமார் 80 லட்சம் நிதிஉதவி வழங்க உள்ளார்.

Leave a Comment

Exit mobile version