கேப்டன் பொறுப்பை ஏற்ற உடன் நச்சுன்னு நான்கு விஷயங்களை சொல்லி அசத்திய ரோகித் சர்மா – ஆச்சிரியத்தில் விராட் கோலி.

இந்திய அணியில் பல்வேறு மாற்றங்களை BCCI தொடர்ந்து    செய்து வருகிறது அந்த வகையில் முதலாவதாக 20 ஓவர் கிரிக்கெட் பார்மட்டில் கேப்டனாக இருந்த வீராட் கோலியை தூக்கிவிட்டு  கேப்டனாக ரோஹித்தை போட்டது அதனைத் தொடர்ந்து தற்போது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் விராட் கோலியின் பதவியை பறித்து பிசிசிஐ ரோகித் சர்மாவுக்கு கொடுத்துள்ளது.

விராட் கோலியின் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை விமர்சனங்களையும் சமூக வலைதள பக்கங்களில் முன்வைக்கின்றனர் ஆனால் கோலியின் செயல்பாட்டை விட ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷிப் செயல்பாடு மிகச் சிறப்பாக இருக்கும் என கருதப்பட்டுள்ளது. தற்போது கேப்டனாக பொறுப்பேற்ற இருக்கும் ரோகித் சர்மா வந்த உடனேயே 4 மாற்றங்களை செய்ய விரும்ப உள்ளார்.

அவர் கூறுவது முதலில் வீரர்கள் ஒரு போட்டியில் ரன் குவிக்க வேண்டும் சதம் அடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றி அமைத்து கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் செயல்பட வேண்டும். இரண்டாவதாக வீரர்களை சரியாக தேர்வு செய்து அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து அவரை ஒரு நல்ல வீரராக அணியில் தக்க வைக்க வேண்டும்.

மூன்றாவதாக இந்திய அணியில் விளையாடும் ஒவ்வொரு வீரர்களும் கடுமையான சூழல்களை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் அந்த மாதிரியான சூழல்களில் அவர்களே இந்திய அணிஅப்படிப்பட்ட சூழல்களில் விளையாண்டு கொண்டு இருப்பதை நன்கு உணர்ந்து கொண்டு அதற்கேற்றவாறு செயல்பட வேண்டும் அந்த முடிவுகளை எடுக்க அவர்களை நான் தயார் படுத்தும் என கூறினார்.

சிறந்த வீரர்கள் இருந்தால் நிச்சயம் அணி வெற்றியை ஆட்டோமேட்டிக் ஆகவே ருசிக்கும் அதனால் சரியான அதேசமயம் சிறந்த வீரர்களை வைத்து இருக்கும் பட்சத்தில் வெற்றி நம் பக்கத்திலேயே இருக்கும் என அவர் கூறினார். இதை அறிந்த கிரிக்கெட்  வல்லுநர்கள் மற்றும் ரசிகர்கள் கோலியை விட ரோகித் சர்மா சிறந்த கேப்டனாக வருவார் என சொல்லி வருகின்றனர்.

Leave a Comment