ஒரு நாள் போட்டியில் 10,000 ரன்கள் அடித்த ரோகித் சர்மா.! எத்தனை போட்டியில் தெரியுமா.? வாழ்த்தும் ரசிகர்கள்

Rohit sharma 10000 runs
Rohit sharma 10000 runs

Rohit Sharma : இந்திய அணி ஆசிய போட்டிகளில் விளையாடிக் கொண்டிருக்கிறது. சூப்பர் போருக்கு தகுதி பெற்ற இந்திய அணி நேற்று பாகிஸ்தானை வீழ்த்தி அசத்தியது அதனைத் தொடர்ந்து இன்று ஸ்ரீலங்கா அணியுடன் பல பரிசை நடத்தி வருகிறது டாஸ் வென்ற ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார்.

தொடர்ந்து இந்திய அணி விக்கெட்டை இழக்காமல் விளையாடி வருகிறது. இந்திய அணி சிறப்பாக விளையாடி வருவதால் இந்த முறையும் ஆசிய கோப்பையை இந்திய அணி கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக உலக கோப்பை போட்டிகளிலும் இந்திய அணி விளையாட இருக்கிறது அதற்கும் ரோஹித் சர்மா கேப்டன்னாக செயல்பட இருக்கிறார்.

இந்த நிலையில் ரோகித் சர்மா இலங்கை உடனான இன்றைய போட்டியின் போது ரோகித் சர்மா ஒரு புதிய சாதனை செய்துள்ளார் அது என்னவென்றால் ஒரு நாள் போட்டியில் 10,000 ரண்களை அடித்துள்ளார் அதுவும் சிக்ஸர் அடித்து தனது 10,000 ரன்களை பூர்த்தி செய்துள்ளார் இதனை தற்பொழுது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அதுவும் ரோஹித் சர்மா 241 போட்டிகளில் 10,000 ரன்களை எட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  விராட் கோலி 205 போட்டிகளில் பத்தாயிரம் ரன்களை கடந்தார் ரோகித் சர்மா 241 போட்டிகளில் 10,000 ரன்கள் கடந்துள்ளார் அடுத்த இடத்தில் சச்சின் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரோகித் சர்மாவின் இந்த சாதனையை ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் கொண்டாடி வருகின்றனர் மேலும் இந்த மேட்சில் அவர் 50 அல்லது 100 அடித்தால் அது இன்னமும் கிப்டாக இருக்கும் என பலரும் கூறி வருகின்றனர் பொறுத்திருந்து பார்ப்போம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்..