ஆஸ்திரேலிய அணியை கதிகலங்க வைக்க “துருப்பு சீட்டை” இறக்கும் ரோஹித் சர்மா.? அந்த பீச் தலைவனுக்கு கைவந்த கலை

Ravichandran Ashwin : ஆஸ்திரேலியா உடனான இன்றைய போட்டியில் துருப்பு சீட்டை களம் இறக்கும் ரோஹித் சர்மா.

இந்தியா அணி ஆசிய கோப்பை வெற்றியை தொடர்ந்து மிகப்பெரிய ஒரு தொடராக பார்க்கப்படும் உலக கோப்பையில் விளையாட ரெடியாகி வருகிறது இன்று ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து இந்திய அணி விளையாட இருக்கிறது இந்த போட்டி சென்னையில் உள்ள எம் .ஏ . சிதம்பரம் மைதானத்தில் தான் நடைபெற இருக்கிறது.

ஆசிய கோப்பை தொடர் முடிந்த உடனேயே இந்திய அணி ஆஸ்திரேலிய  அணிவுடன் ஒரு நாள் போட்டியில் விளையாடியது இதில் 2-1 என்ற கணக்கில் தொடரை இந்திய அணி வென்றது அதனை தொடர்ந்து இன்று போட்டி நடைபெற இருப்பதால் ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

முக்கியமான போட்டி என்றாலே ஆஸ்திரேலியா அணி  பயங்கரமாக ஆடும் அதேபோல இந்திய அணியும் சும்மா சொல்லி விடக்கூடாது கடந்த சில வருடங்களாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மூன்று ஃபார்மட்டிலும் நம்பர் ஒன் இடத்தை பிடித்திருக்கிறது இதனால் ஆஸ்திரேலியா அணிக்கு பயங்கர டாப் இந்தியா கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வெற்றி பெற இந்திய அணி  பல யூகங்களை வகுத்து வருகிறது குறிப்பாக அஸ்வினை இந்த போட்டியில் இறக்கி ஆஸ்திரேலியாவுக்கு பயத்தை காட்டவிருக்கிறது அஸ்வின் இந்த போட்டியில் விளையாட மூன்று காரணமும் இருக்கிறது.

சென்னை சேப்பாக்கம் மைதானம் அஸ்வினுக்கு பழக்கப்பட்ட மைதானம் அதனால் பந்து எப்படி  ஸ்பின்னாகும் என நன்கு அறிந்திருக்கிறார். ஆஸ்திரேலியா அணியின் இடது கை பேட்ஸ்மேனுக்கு அஸ்வின் சிம்ம சொப்பனமாக இருப்பார் அதிலும் டேவிட் வார்னர் நிச்சயம் அஸ்வின் பந்தை சமாளிக்க ரிவர்ஸ் படிப்பது வலது கையில் ஆடுவது போன்ற ஏதாவது வேலையை பார்ப்பார்.

ASHWIN
ASHWIN

இந்த மேட்ச் முழுக்க முழுக்க ஸ்பின்னோருக்கான பேச்சு என்பதால் மூன்று பேருடன் செல்ல திட்டமிட்டு இருக்கிறது அதனாலயே அஸ்வினும் பேருந்துள்ளார் ஜடேஜா குல்தீப் யாதவ் ஆகியோர்வர்கள் வழக்கமாக பந்து வீசுவார்கள்.