இந்த ஒரே ஒரு போட்டோவே போதும் ரோகித் ஷர்மா-கோலி சண்டைக்கு முற்றுப்புள்ளி.! இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்

0
virat-rohit
virat-rohit

விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவுக்கும் இடையே இருந்த மோதல் ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளதாக இந்த புகைப்படத்தை பார்த்தால் தெரிகிறது.

இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை போட்டி முடிவடைந்த நிலையில் இந்திய அணியில் பெரும் புகச்சளாக  இருப்பது விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா மோதல்தான், இந்திய அணி உலக கோப்பை போட்டியில் தோல்வி அடைந்ததற்கு காரணம் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா மோதல் தான் என ஒரு கிசுகிசு இருந்தது.

அதாவது இந்திய அணியில் இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே மோதல் இருந்ததால் இந்திய அணியில் இரண்டு பிரிவு அணிகளாக இருந்தார்கள் என கூறப்படுகிறது, அதனால் இவர்கள் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க சமரசம் செய்து வைக்க பிசிசிஐ தயாரானது. ஆனால் அதற்குப் பிறகு இந்த விவகாரம் அடங்கியது.

ஆனால் அதன் பிறகு இந்த விவகாரம் மீண்டும் ரெக்கை கட்டி பறந்தது அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சில போட்டோக்கள் வெளியானதால் ஆளாளுக்கு அதைப் பற்றிப் பேசினார்கள். இந்த நிலையில் இந்த விவகாரத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் விராத் கோலி ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் இந்திய அணி வீரர்கள் அனைவரும் ஆண்டிகுவாவில் உள்ள ஒரு கடற்கரையில் குளித்துக் கொண்டிருக்கிறார்கள் அதில் ரோகித் சர்மாவும் இருக்கிறார் அனைவரும் ஒருவர் மீது ஒருவர் தோளில் கைகளை போட்டவாறு போஸ் கொடுத்துள்ளார்கள். இந்த புகைப்படத்தை பார்க்கும் பொழுது விரத் கோலிக்கும் ரோஹித் சர்மாவுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை அவர்கள் சுமுகமாக தான் இருக்கிறோம் என்பதை கோலி புகைப்படத்தின் மூலம் உறுதி செய்துள்ளதாக தெரிகிறது.

kohli
kohli