ரோகித் சர்மாவுக்கும் விராத் கோலிக்கும் என்னதான் பிரச்சனை.? ரவி சாஸ்திரி ஓபன் டாக்.!

0
virath
virath

இந்திய அணியில் இருக்கும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா பிரச்சினை பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது, விராத் கோலி ரசிகர்களுக்கு ரோஹித் ஷர்மா ரசிகர்களும் இணையதளங்களில் அடிகடி சண்டை போட்டுக் கொள்கிறார்கள். இந்தப் பிரச்சினையின் உச்சக்கட்டமாக தான் இந்திய அணி அரையிறுதியில் தோற்றது என ஒரு பகிரங்க விமர்சனம் எழுந்தது.

இந்த தகவல் காட்டுத்தீ போல் பரவியது இதனை கண்டு கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் அதிர்ந்தார்கள், இவர்கள் இருவருக்கும் என்ன பிரச்சினை என்று தெரியாமல் தலையை பிச்சுக்கொண்டு அலைந்தார்கள் பத்திரிக்கையாளர்கள், இது சரிப்பட்டு வராது என தெரிந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இடமே கேட்டார்கள்.

இதற்கு பதிலளித்த ரவிசாஸ்திரி நீங்கள் கூறுவதை போல் விராத் கோலிக்கும் ரோஹித் சர்மாவுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை, அவ்வாறு பிரச்சினை இருந்தால் எப்படி ரோகித் சர்மா 5 சதங்களை அடித்து இருக்க முடியும். அதே போல் கலத்தில் ஒருவருக்கு ஒருவர் எப்படி ஆலோசனை கூறி கொள்ள முடியும்.

ரோகித் சர்மாவின் சதங்களை கண்டு விராட் கோலி சந்தோஷப்பட்டார், கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக நான் இந்திய அணி வீரர்களுடன் நெருங்கி பழகி வருகிறேன். அவர்களுக்கு இடையே எந்த ஒரு பிரச்சினையும் இல்லை இன்னும் சொல்லப்போனால் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள் என ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது சில சமயங்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு இருக்கும் அனைவரின் கருத்துகளையும் கேட்ட இருந்தால்தான் புதிய விதிகளை உருவாக்க முடியும் இருவருக்கும் பிரச்சினை என்றால் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாது, ஆனால் அதற்கு மாறாக இருவரும் போட்டி போட்டுக்கொண்டு தங்களது திறமைகளை நிரூபித்து வருகிறார்கள்,

இதற்கு முன் ஒரு பேட்டியில் இதே கேள்வியை விராட் கோலியிடன் கேட்கப்பட்டது அதற்கு பதிலளித்த விராட்கோலி எனக்கு ரோஹித்க்கும் எந்த ஒரு தனிப்பட்ட விரோதமும் இல்லை என்று கூறியிருந்தார்.