சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து மீனா விடம் வந்து நாம் இருவரும் விஜய் டிவியில் நடக்க இருக்கும் நிகழ்ச்சிகள் கலந்து கொள்ளலாம் எனக் கூற என்ன நிகழ்ச்சி என கேட்க கணவன் மனைவி போல் ஒளிவு மறைவு இருக்கலாமா என்பதுதான் எனக் கூறினார் அதனால் மீனா அதிர்ச்சடைகிறார் அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சிக்கு நான் வரவில்லை எனவும் கூறு விடுகிறார் இதனால் முத்து வேறு வழி இல்லை விட்டுவிட வேண்டும் என செல்கிறார்.
ரோகினிக்கு பேய் பிடித்தது போல் ஆரம்பிக்கிறார் அதாவது ரோகினி உடம்பில் கல்யாணி புகுந்து விட்டதாக கூறி மனோஜை நம்ப வைக்கிறார் அது மட்டும் இல்லாமல் தன்னுடைய மகனை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அவன் இங்குதான் படுத்துக் கொள்வான் எனவும் கூறுகிறார்.
இதனை செய்யவில்லை என்றால் உன்னை எதுவும் செய்ய மாட்டேன் நீ உசுருக்கு உசுராக நினைக்கிற உங்க அம்மாவின் ரத்தத்தை உறிஞ்சி குடிச்சி விடுவேன் என பேசுகிறார் இதனால் மனோஜ் பயந்து போய் மூளையில் உட்காருகிறார்.
உடனே கிருஷ்க்கு பசிக்கும் ஒழுங்கா சாப்பாடு ஊட்டு என கூற மனோஜ் அதிர்ச்சி அடைகிறார் நீ தான் ஊட்ட வேண்டும் எனவும் கூறுகிறார் இல்லையென்றால் ரோகிணி உடம்பை விட்டு நான் போக மாட்டேன் எனவும் கூறிவிடுகிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த மனோஜ் கிருஷ்க்கு இட்லி ஊட்டுகிறார் இதனை பார்த்த விஜயா அதிர்ச்சி அடைகிறார் அது மட்டும் இல்லாமல் மீனா முத்து சுருதி ரவி என அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
ஆனால் விஜயா நீ எதுக்கு இவனுக்கு போய் இட்லி ஊட்ற என மனோஜை திட்ட சின்ன பையன் பசிக்குது சொன்ன அதனால் ஊட்டுகிறேன் என கூறுகிறார். உடனே ரோகினியை பார்த்து என்ன இதெல்லாம் என கேட்க எனக்கு எதுவும் தெரியாது ஆன்ட்டி என கூறுகிறார்.
அதேபோல் இரவு தூங்கும் பொழுது மனோஜ் மீது காலை போட்டுக்கொண்டு தூங்குகிறான் கிரிஷ் ஆனால் மனோஜ்க்கு தூக்கம் வராமல் முழித்துக் கொண்டிருக்கிறார். இது எங்க போய் முடியும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.